கோவையில் அங்கன்வாடி மையம் கட்டி கொடுத்த கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரனுக்கு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் சரளா வசந்த் போஸ்ட்டர் ஒட்டி நன்றி தெரிவித்ததால் பரபரப்பு.

கோவை கிணத்துகடவு சட்டமன்ற தொகுதிக்குடட்ட கோணவாய்க்கால் பாளையம் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக அதிமுக அமைப்பு செயலாளரும், கிணத்துகடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நிதி ஒதுக்கி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி, குழந்தைகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

இதனை பாராட்டி காங்கிரஸ் கட்சியின் 85 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரளா வசந்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினரான செ தாமோதரனுக்கு நன்றி தெரிவித்து மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகிறார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் அதிமுக எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version