சட்​டம் – ஒழுங்கு சீர்​கேடு மற்​றும் பெண்களுக்கு எதி​ரான குற்​றங்​கள் அதி​கரித்​துள்​ள​தாக கூறி தேசிய ஜனநாயகக் கூட்​டணி கட்​சி​யினர் நேற்று முன்​தினம் மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தினர். இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், கண்ணியக்குறைவாகவும் இவர்களது பேச்சு இருந்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும், மகளிர் அமைப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வந்தனர்.

விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், அப்துல் கலாம் அவர்கள் ‘கனவு காணுங்கள்’ என்று சொன்னார். ஆனால் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய், ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள், நான் நிறைவேற்றுகிறேன்’ என்கிறார். எனக்கு ‘பிரபலமான நடிகை(நயன் தாரா) ஒருவர் வேண்டும்’ என்று கேட்டால் இவரால் அந்தக் கனவை நிறைவேற்ற முடியுமா? என்று பேசினார்.

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், திண்டுக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், சேலையும் கொடுத்துருக்காங்க… எப்படிரா பாவாடை இல்லாமல் கட்டுறது என பொம்பளைங்க எல்லாம் கேட்கிறாங்க என்று கூறியிருந்தார்.

இதேபோல், கரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், உழவர் சந்தையில் உள்ள காய் காய்கறிகளை காட்டி அதுதான் கத்தரிக்காய். ஒல்லியாக இருக்கிறது பார் அதுதான் முருங்கை காய் என்கிறார்களாம். பக்கத்தில் இருக்கும் பெண்களை கைகாட்டி இந்த பிள்ளைகள் போல் குண்டா இருக்கிறது பார் அதுதான் பூசணிக்காய் என்று என்கிறார்கள் ” என்று பேசி உள்ளார். தேர்தல் நேரத்தில் இப்படி பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சர்கள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியின் முக்கிய சந்திப்பு சாலையில் உள்ள மேம்பாலத்தின் கீழ், இந்த மூன்று முன்னாள் அமைச்சர்களின் உருவப் படங்களுடன் கூடிய கட்-அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன. அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, அந்த மூன்று படங்களுக்கும் மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்திருந்தனர். மேலும் திண்டுக்கல் சீனிவாசன் கட் – அவுட்டிற்கு பாவாடை கட்டியுள்ளனர். காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்-அவுட்களுக்கு செருப்பு மாலை அணிவித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version