Close Menu
    What's Hot

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தூத்துக்குடி லாக்-அப் மரணம்?. உடற்கூறாய்வு நிறைவு; அருணாச்சலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
    தமிழ்நாடு

    தூத்துக்குடி லாக்-அப் மரணம்?. உடற்கூறாய்வு நிறைவு; அருணாச்சலத்தின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

    Editor web3By Editor web3July 24, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tuticorin body hand over
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடற்கூறாய்வு நிறைவுபெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் கடந்த 17ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    காவல் நிலையத்தில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அருணாச்சலம் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலைய விசாரணையின் போது அருணாச்சலம் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட காயங்களே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    மேலும், அருணாச்சலத்தின் மரணம் குறித்து நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், தன்னை போலீசார் அடித்தார்கள் என்று கடைசியாக பேசிய வாக்குமூலம் மற்றும் காவல் நிலையத்தில் மயங்கி விழும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

    இதை தொடர்ந்து உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, இன்று அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.  தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அருணாச்சலத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அமுதா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    arunachalam lock up dead body handed over Custodial death Post-mortem completed tuticorin lock up dead?
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவரும் 27ம் தேதி.. மாணவர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க விசிக போராட்டம்.. திருமாவளவன் அறிவிப்பு!
    Next Article கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்..!! சக நோயாளி அடித்துக்கொ*ல..!!
    Editor web3
    • Website

    Related Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    July 24, 2026

    தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

    July 24, 2026

    வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை!. தமிழகத்தில் 70,485 பேர் விண்ணப்பித்துள்ளனர்!. மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

    தர்மேந்திர பிரதான் பதவி விலகணும்..!! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்..!!

    வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! 1,200 பேர் மீட்பு.. 22 ஆயிரம் பேர் வெளியேற்றம்..!!

    சூடுபிடிக்கும் குதிரை பேரம் வழக்கு..!! நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி..!!

    இறுதி வடிவம் பெறும் தமிழக பட்ஜெட்..!! மக்கள் எதிர்பார்க்கும் வாக்குறுதிகள் இடம்பிடிக்குமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.