Close Menu
    What's Hot

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை

    ”தவறாக புரிந்து கொண்டவர்கள் தற்குறிகள்”..! நடிகர் மகேந்திரன் விளக்கம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»தமிழ்நாடு»சென்னையை நெருங்கியது ‘டிட்வா’ புயல்; திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’
    தமிழ்நாடு

    சென்னையை நெருங்கியது ‘டிட்வா’ புயல்; திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு ‘ரெட் அலர்ட்’

    Editor TN TalksBy Editor TN TalksNovember 30, 2025Updated:November 30, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வங்​கக் கடலில் நில​வும் `டிட்​வா’ புயல் இன்று காலை சென்​னையை நெருங்கு​கிறது. இதையொட்​டி, திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களுக்கு `ரெட் அலர்ட்’ விடுக்​கப்​பட்​டுள்​ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்​குநர் செந்​தாமரைக்​கண்​ணன் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தென்​மேற்கு வங்​கக்​கடல், அதையொட்​டிய வடக்கு இலங்கை பகு​தி​களில் ‘டிட்​வா’ புயல் நிலை கொண்​டுள்​ளது. இது மேலும் வடமேற்​காக நகர்ந்து இன்று (நவ.30) காலை வடதமிழகம் மற்​றும் அதையொட்​டிய தெற்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​களுக்கு அருகே நில​வக்​கூடும். இன்று மாலை புயல் சென்​னை​யை நெருங்​கி வரும்.

    இதன் காரண​மாக, இன்று வட தமிழகத்​தில் பெரும்​பாலான இடங்​களி​லும், தென் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி​யிலும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். டெல்​டா, தென் தமிழக கடலோர மாவட்​டங்​கள், காரைக்​கால் பகு​தி​களில் மணிக்கு அதி​கபட்​சம் 75 கி.மீ. வேகத்​தில் பலத்த காற்று வீசக்​கூடும். வட தமிழக கடலோர மாவட்​டங்​கள், புதுச்​சேரி​யில் 80 கி.மீ. வேகத்​தில் தரைக்​காற்று வீசக்​கூடும்.

    இன்று திரு​வள்​ளூர், ராணிப்​பேட்டை மாவட்​டங்​களில் அதி​க​னமழை (‘ரெட் அலர்ட்’) பெய்​யக்​கூடும். சென்​னை, காஞ்​சிபுரம், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், திரு​வண்​ணா​மலை, வேலூர், திருப்​பத்​தூர், கிருஷ்ணகிரி, தரு​மபுரி மாவட்​டங்​களில் கன முதல் மிக கனமழை​யும், சேலம், கள்​ளக்​குறிச்​சி, கடலூர் மாவட்​டங்​கள் மற்​றும் புதுச்​சேரி​யில் கனமழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது. நாளை திரு​வள்​ளூர் மாவட்​டத்​தில் கனமழை​யும், மற்ற பகு​தி​களில் மித​மான மழை​யும் பெய்ய வாய்ப்பு உள்​ளது.

    தமிழக கடலோரப் பகு​தி​கள், குமரிக்​கடல், மன்​னார் வளை​குடா பகு​தி​களில் இன்று அதி​கபட்​ச​மாக 90 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும்.

    தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி வரையி​லான 24 மணி நேரத்​தில் பதி​வான மழை அளவு​களின்​படி அதி​கபட்​ச​மாக நாகை மாவட்​டம் கோடியக்​கரை​யில் 25 செ.மீ., வேதா​ரண்​யத்​தில் 19 செ.மீ., வேளாங்​கண்​ணி​யில் 13 செ.மீ., திருப்​பூண்​டி, நாகை​யில் 12 செ.மீ., தலை​ஞா​யிறில் 11 செ.மீ., ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், காரைக்​காலில் 10 செ.மீ., தங்​கச்​சிமடம், ராமேசுவரம், தொண்​டி, மண்​டபம், தூத்​துக்​குடி மாவட்​டம் காயல்​பட்​டினம், சிவகங்கை மாவட்​டம் இளை​யான்​குடி, நாகை மாவட்​டம் திருக்​கு​வளை​யில் 7 செ.மீ. மழை பதி​வாகி​உள்​ளது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியா- தெ.ஆப்., இடையே இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
    Next Article நாகையில் கனமழை நீடிப்பு…. இயல்பு வாழ்க்கை பாதிப்பு
    Editor TN Talks

    Related Posts

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    June 16, 2026

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை

    June 16, 2026

    ”தவறாக புரிந்து கொண்டவர்கள் தற்குறிகள்”..! நடிகர் மகேந்திரன் விளக்கம்..!

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக நகராட்சி கவுன்சிலர் அடாவடி; கணினி மையத்தில் தாக்குதல் ; பரபரப்பு சிசிடிவி காட்சி

    தமிழ்நாடு அரசின் நிதி நிலைமை – இன்று மாலை வெளியாகிறது வெள்ளை அறிக்கை

    ”தவறாக புரிந்து கொண்டவர்கள் தற்குறிகள்”..! நடிகர் மகேந்திரன் விளக்கம்..!

    மக்கள் பிரச்சனைக்கு எப்போ கால்ஷீட் கொடுக்கப் போறீங்க முதல்வரே..!! மு.க ஸ்டாலின் சரமாரி கேள்வி..!!

    Darling vijay..!! பதவி மாறினாலும் நீங்க மாறவில்லை..!! பாராட்டிய நடிகர் விஷால்.. செய்த தரமான செய்கை..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.