நாகை மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக இன்று மதியம் 12 மணி வரை 94 சென்டிமீட்டர் அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
மாநிலத்தில் மிக அதிகபட்சமாக நேற்று இரவு தொடங்கி இன்று மதியம் வரை கோடியக்கரை பகுதியில் 31.20 சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. வேதாரண்யம் அருகே உள்ள தோப்புத்துறையில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல திருப்பூண்டியில் 20 சென்டிமீட்டர், வேளாங்கண்ணியில் 18 சென்டிமீட்டர், நாகையில் 17 சென்டிமீட்டர், வேதாரண்யத்தில் 18 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருந்தது.
