இன்ஸ்டாகிரமில் ஒரு போஸ்ட்டுக்கு நள்ளிரவில் துணை முதலமைச்சர் உதயநிதி லைக் போடுகிறார் இப்படிபட்டவர் நாட்டுக்கு தேவையா? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் அரசியல் கட்சியினர் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி பேசி விமர்சித்து வருகின்றனர். மக்களிடம் ஆதரவு பெறவேண்டும் என்பதற்காக எதிர் தரப்பினரை குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்துவருவது வழக்கமாகிவிட்டது. அதன்படி, ஈரோடு பவானிசாகர் தொகுதி அரியப்பம்பாளையம் பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய அவர், அதிமுக தேசிய ஜனநாயக கூட்டணி தானாக அமைந்தது. இது வலிமையான கூட்டணி. திமுக – காங்கிரஸ் கூட்டணி இருப்பது சந்தேகம். காங்கிரஸ் ஆட்சியில் பங்கு தர வேண்டும், தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்காவிடின் பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் எம்பி ஒருவர் கூறியுள்ளார். காங்கிரஸ் – திமுக கூட்டணி கலக்கத்தில் உள்ளது. திமுக கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.
படத்தில் ஒரு பாடல் இருக்கிறது.. இரவினில் ஆட்டம்.. பகலில் தூக்கம் என்று.. உதயநிதி ஸ்டாலின் அப்படித்தான் இருக்கிறார்.. இரவில் என்ன செய்கிறார்.. இரவில் ஆடுகிறார்.. பகலில் தூங்குகிறார்.. மக்களை பார்க்கமால் இருக்கிறார்.
இதெல்லாம் போக அவர் என்ன செய்கிறார்.. இன்ஸ்ட்டாகிராமில் ஆட்டம் போடுகிறார்.. அங்கே ஒரு விஷயத்திற்கு லைக் போடுகிறார்.. நான் சொல்லவில்லை.. நீங்களே என்ன செய்தார் என்று பாருங்கள்.. இப்படிப்பட்ட நபர் தமிழ்நாட்டிற்கு தேவையா ? இவரெல்லாம் துணை முதல்வராக இருக்க வேண்டுமா?, எப்போது பார்த்தாலும் எடப்பாடி எப்படி வந்தான் தெரியுமா என்று கேட்பார்கள். நான் புகுந்து வந்தேன். பறந்து வந்தேன் என்பார்கள்.. நான் எப்படியோ வந்துவிட்டேன்ல.. நான் உழைத்து வந்தேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து வருகிறார்.
