Close Menu
    What's Hot

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஜூன் 5-ல் அனைத்துக் கட்சி கலந்தாய்வு- அன்புமணி
    தமிழ்நாடு

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஜூன் 5-ல் அனைத்துக் கட்சி கலந்தாய்வு- அன்புமணி

    Editor web1By Editor web1May 29, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Anbu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் ‘சமூகநீதி சர்வே’ எனப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: “இந்தியாவிலேயே சமூகநீதியில் முன்னோடியாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளுக்கு முன்பே 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த பெருமை கொண்ட இந்த மாநிலம், அண்மைக்காலமாக சமூகநீதி முன்னெடுப்புகளில் பிற மாநிலங்களை விடப் பின்தங்கியுள்ளது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தரவுகளைக் கொண்டே இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் கையாளப்படுவதால், புதிய சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாகியுள்ளது.”

    “2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் ‘சாதிவாரி சர்வே’ மேற்கொள்ளப்படும் என்று முதல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். பீகார், தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தி இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தியுள்ள நிலையில், அதேபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள தமிழகத்திற்கு அனைத்து சட்டப்பூர்வ அதிகாரங்களும், நிதி வசதிகளும் உள்ளன.”

    இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவும், சமூகநீதி சர்வேயின் அவசியம் குறித்து விவாதிக்கவும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜூன் 5-ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்குத் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்படும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போதே, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதும், அடுத்த இரு மாதங்களுக்குள் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    இவ்வாது தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒழிக்கப்பட்ட புரோக்கர் கலாசாரம்; ஆடிப்போனது தீய சக்தி, ஊழல் சக்தி – தவெக ஐ.டி.விங் தம்பட்டம்
    Next Article குஷ்பு வீட்டில் டும்டும்டும் – பிரதமருக்கு நேரில் அழைப்பு
    Editor web1
    • Website

    Related Posts

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    July 14, 2026

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    July 14, 2026

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    July 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “செம்ம படம், ரொம்ப ஜாலி!”: விஷ்ணு விஷாலை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

    மலேசியாவில் ‘ஜெயிலர் 2’ ஆடியோ லான்ச்? டத்தோ அப்துல் மாலிக்கை சந்தித்த ரஜினிகாந்த்

    கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு: பயணிகள் தவிப்பு!

    கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வெடி விபத்து: உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு!

    பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள்: நாகர்கோவில் காசி வழக்கில் நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.