சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியில் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் 3.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 113 தெருக்களில் வாழும் 50,000 பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 6.25 எம்.எல்.டி செயல்திறனுடன் H2S வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவு நீர் உந்து நிலையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்….

 

தொடர்ந்து சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாவட்ட செயலாளர் சிற்றரசு ஆகியோர் உடன் இருந்தனர்.

 

தொடர்ந்து சென்னை, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார்.

 

முதலாவதாக டாக்டர் பெசன்ட் சாலையில் 2024-25 ஆம் ஆண்டு மூலதன நிதியின் கீழ் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டட பணியினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

 

இரண்டாவதாக பங்காரு தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து உள்ளே சென்று பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமிகளுக்கு சாக்லேட் கொடுத்த துணை முதல்வருக்கு ரோஜா பூ கொடுத்து மாணவ, மாணவிகள் வரவேற்றனர். மேலும் வாட்டர் பாட்டில், பேனா, பென்சில், புதிய எழுதும் நோட்டுகள், டிபன் பாக்ஸ் அடங்கிய தொகுப்புகள் கொண்ட புதிய புத்தக பைகளை 80 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்.

 

தொடர்ந்து கொய்யாதோப்பு, நாகப்பன் தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சென்னை ஆரம்ப பள்ளிக் கட்டிடத்தை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கும் மாணவ மாணவிகளுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தார். மேலும் வாட்டர் பாட்டில், பேனா, பென்சில், புதிய எழுதும் நோட்டுகள், டிபன் பாக்ஸ் அடங்கிய தொகுப்புகள் கொண்ட புதிய புத்தக பைகளை 120 மாணவ மாணவிகளுக்கு வழங்கினார்…..

 

இறுதியாக லாக் நகரில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை திறந்து வைத்தார். முன்னதாக லாக் நகருக்கு வருகை தந்த துணை முதலமைச்சர்ருக்கு மேல தாளங்கள் முழங்க, மலர்கள் தூவி, அப்பகுதி பெண்கள் சார்பில் பூரண கும்பம் மரியாதை வழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இறுதியாக குழந்தை ஒருவருக்கு தமிழ்ச்செல்வி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version