தவெக தலைவர் விஜய் முதல் முறையாக தேசிய ஊடகமான NDTVக்கு நேர்காணல் அளித்துள்ளார்.. NDTV தலைமை ஆசிரியர் ராகுல் கன்வால், நிர்வாக ஆசிரியர் ஷிவ் அரூர் மற்றும் அரசியல் ஆசிரியர் வசுதா வேணுகோபால் ஆகியோருக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

கேள்வி : கரூர் சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உங்கள் பதில் தாமதமானதற்கு காரணம் என்ன?

விஜய் : கரூர் சம்பவம் எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அது இன்னும் என்னை துரத்திக்கொண்டே இருக்கிறது. நடந்ததை முழுமையாக புரிந்து கொள்ளவும், அதை மனதில் ஜீரணிக்கவும் எனக்கு நேரம் தேவைப்பட்டது. எல்லாவற்றுக்கும் உடனடியாக நான் எதிர்வினை ஆற்றுவதில்லை. நான் என்ன அனுபவித்தேன் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டியிருந்தது.

கேள்வி : நெருக்கடி நேரங்களில் உங்கள் மௌனம் சந்தேகங்களை ஏற்படுத்துகிறது என சிலர் கூறுகிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

விஜய் : நான் உடனடியாக பதிலளிக்கவில்லை என்பதாலேயே பேசவில்லை என்று அர்த்தமில்லை. என் உரைகளின் மூலம் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன். மௌனம் என்பது இல்லாமை அல்ல.

கேள்வி : இது குறுகிய கால அரசியல் முயற்சியா, அல்லது நீண்ட பயணமா?

விஜய் : இது ஒரு நீண்டகாலத் திட்டம். இதை நான் சாதாரணமாகச் செய்யவில்லை. 33 ஆண்டுகள் சினிமாவில் இருந்ததை உணர்ந்து கொண்டே விட்டு விலகியுள்ளேன். அது எளிதான முடிவு அல்ல. ஆனால் நான் முடிவு செய்துவிட்டேன். நீண்ட பயணத்திற்காகத்தான் வந்திருக்கிறேன்.

கேள்வி : உங்களை ஊக்குவிக்கும் தலைவர்கள் அல்லது ஆளுமைகள் யார்?

விஜய் : ஷாருக்கான் அவர்களின் தெளிவான பேச்சும், கருத்துகளை அழகாக வெளிப்படுத்தும் திறனும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதை நான் எப்போதும் கவனித்திருக்கிறேன். அதேபோல் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் ஆகியோர் அர்த்தமுள்ள சாதனைகளை செய்த தலைவர்கள்; அவர்களையும் நான் முன்மாதிரிகளாக பார்க்கிறேன்.

கேள்வி : ஜனா நாயகன் படம் சிக்கலில் உள்ளது. அரசியல் உங்கள் சினிமா
வாழ்க்கையை பாதித்ததா?

விஜய் : என் அரசியல் நுழைவால் ஜனநாயகன் படம் பாதிக்கப்படுவது என் தயாரிப்பாளருக்காக எனக்கு வருத்தமாக இருக்கிறது. அரசியலில் இறங்கினால் சினிமா பாதிக்கப்படும் என்பதை நான் முன்பே எதிர்பார்த்தேன். அதற்காக மனதளவில் தயார் நிலையில் இருந்தேன்.

கேள்வி : அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்று எப்போது முடிவு செய்தீர்கள்?

விஜய் : கோவிட் காலத்திற்குப் பிறகு அரசியல் குறித்து நான் மிகவும் தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினேன். இது திடீர் முடிவு அல்ல. என் தந்தை அரசியல் இயக்குநராக இருந்தவர். அதனால் இந்த உலகை அருகிலிருந்து பார்த்து வளர்ந்தவன் நான்.

கேள்வி : கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க தயக்கம் அல்லது தன்னம்பிக்கை குறைவு உங்களுக்கு இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

விஜய் : அது உண்மையில்லை என்று நினைக்கிறேன். இன்று எல்லா வகையான கேள்விகளுக்கும் அமைதியாகவும் தெளிவாகவும் பதிலளித்துள்ளேன். நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்பதில் எனக்கு எந்த குழப்பமும் இல்லை. முடிவு எடுத்துவிட்டேன். சினிமாவை விட்டு விட்டேன். இதுதான் என் எதிர்காலம்.

கேள்வி : இதுவரை தேசிய ஊடகங்களுடன் நீங்கள் உரையாடவில்லை. இப்போது ஏன்?

விஜய் : ஆம், இது தேசிய ஊடகத்துடன் எனது முதல் உரையாடல். இதை ஒரு ‘மாக் இன்டர்வியூ’ மாதிரி எடுத்துக்கொள்கிறேன். நான் போதுமான அளவு பேசவில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால் என் உரைகளின் மூலம் நான் எப்போதும் பேசிக்கொண்டே இருக்கிறேன்.

கேள்வி : நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா, அல்லது மத்திய பாதையிலா?

விஜய்: நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, மத்தியமும் இல்லை. எனக்கு அரசியல் என்றால் மக்களின் பிரச்சினைகள். அதுவே முக்கியம்.

கேள்வி : உங்கள் ரசிகர் வட்டம் அரசியல் சக்தியாக மாறும் என்று நம்புகிறீர்களா?

விஜய் : என் ரசிகர்கள் தான் என் கட்சியின் களப்பணியாளர்களாக மாறுவார்கள். இது ஒரு இயக்கத்தை உருவாக்குவது பற்றியது.

கேள்வி : தமிழ்நாடு அரசியலில் ‘கிங் மேக்கர்’ ஆக விரும்புகிறீர்களா?

விஜய் : இல்லை. அந்த கேள்வியே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கிங் மேக்கராக இருக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? கூட்டத்தை பார்த்தீர்களா? நான் வெல்ல வந்திருக்கிறேன். ஒரு அறிக்கை வெளியிட அல்ல; இந்தத் தேர்தலை வெல்லவே நான் போராடுகிறேன்.

கேள்வி : நீங்கள் இடதுசாரியா, வலதுசாரியா, அல்லது மத்திய பாதையிலா?

விஜய் : நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, மத்தியமும் இல்லை. எனக்கு அரசியல் என்றால் மக்களின் பிரச்சினைகள்தான். அதுவே முக்கியம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version