சங்கீதா தாக்கல் செய்த விவாகரத்து மனு தொடர்பாக விசாரணைக்கு நேரரில் ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் – சங்கீதா திருமணம் 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். நடிகராக விஜய் இருந்த போதும் சங்கீதா அவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கடந்த 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடுத்துள்ளார். இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி 24-ந்தேதி சங்கீதாவின் தாக்கல் செய்த இந்த மனு, வருகின்ற ஏப்ரல் 20-ந்தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வர உள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணைக்கு விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version