கோவை மாவட்டம் காரமடை கண்ணார்பாளையம் அர்ச்சனா அவன்யூ பகுதியை சேர்ந்தவர் மனோஜ்(35). இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சந்தை வியாபாரியான இவரது வீட்டில் இரு நாய்களை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இவரது வீட்டு காம்புவுண்டிற்குள் சுமார் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று வந்துள்ளது. பாம்பு வருவதை கண்ட வளர்ப்பு நாய்கள் பாம்பை வீட்டினுள் வரவிடாமல் தொடர்ந்து தடுத்து தொடர்ந்து குரைத்ததோடு, பாம்பை விடாமல் தாக்கியது.

இதனையடுத்து நாய்களை கண்டு பயந்து போன பாம்பு பாய்ந்து அங்கிருந்த காருக்குள் புகுந்தது. பின்,பாம்பினை அருகில் உள்ள இளைஞர் ஒருவர் பிடித்து வெளியே விட்டார். இது குறித்த வீடியோ காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை உள்ளே விடாமல் தடுத்த வளர்ப்பு நாய்கள் குறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version