Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘விசில்’ சத்தம் கேட்கக்கூடாது..” அரசின் திடீர் தடை! விழிப்புணர்வா? பயமா?
    தமிழ்நாடு

    ‘விசில்’ சத்தம் கேட்கக்கூடாது..” அரசின் திடீர் தடை! விழிப்புணர்வா? பயமா?

    Editor web3By Editor web3February 13, 2026Updated:February 13, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    whistle cleaning workers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூய்மை பணியாளர்கள் இனி ‘விசில்’ பயன்படுத்த நகராட்சி நிர்வாகத்துறை திடீர் தடை விதித்துள்ளது. இதன் பின்னணியில் பேசப்படும் தகவல்கள் பற்றி பார்க்கலாம்.

    தமிழகத்திலுள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி, ஊராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரமாகும் குப்பையை சேகரிக்கின்றனர். இதில் பெரும்பாலான மாநகராட்சிகள், நகராட்சிகளில் வீடுகளுக்கே சென்று குப்பை சேகரிக்கும் பணியை தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக நிரந்தர அடிப்படையிலும் ஒப்பந்த அடிப்படையிலும் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை போன்ற மாநகராட்சிகளில் தனியார் நிறுவனங்கள் வாயிலாகவும் குப்பைகளை சேகரிக்கும் பணி கையாளப்பட்டு வருகிறது. இதில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் பணிகளை செய்யும் போது தூய்மை பணியாளர்கள் தாங்கள் வந்திருப்பதை பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் விசில் பயன்படுத்துவர். தூய்மை பணியாளர்களின் விசில் சத்தம் கேட்டு பொது மக்கள் குப்பையை எடுத்து வந்து குப்பை வண்டியில் கொட்டுவது வழக்கம். இந்நிலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட தவெகவுக்கு தேர்தல் ஆணையத்தால் விசில் சின்னம் ஒதுக்கப்பட்டு, வரும் சட்டசபை தேர்தலில் விசில் சின்னத்தில் தவெக தேர்தலை சந்திக்க இருக்கிறது. எனவே, விசில் பயன்படுத்துவதை தவிர்க்கும் படி நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறைகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    குறிப்பாக தூய்மை பணியாளர்கள் இனி விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கிய பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அரசு பஸ்களில் கூட இனி நடத்துநர்கள் விசில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் சிலர், “தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ‘விசிலுக்கு பதிலாக ஒலிபெருக்கி பயன்படுத்துவது’ என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டது தான். இதற்காக தூய்மை விழிப்புணர்வு பாடல் உருவாக்கப்பட்டு, தெருக்களில் வலம் வரும் குப்பை வண்டியில் ஒலிபரப்பப்பட்டது. இதை சில உள்ளாட்சி அமைப்புகள் தொடர்ந்து செய்து வருகின்றன. சில இடங்களில் விசில் பயன்படுத்துகின்றனர். விசிலை விட ஒலிபெருக்கி வாயிலாக மக்கும், மக்காத குப்பை தரம் பிரித்தல் குறித்து தூய்மைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். எனவே தான் விசிலை தவிர்த்து ஒலிபெருக்கி பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது” என கூறினர்.

    இருப்பினும் அரசினுடைய இந்த அணுகுமுறை என்பது, தமிழக வெற்றிக்கழகத்தை பார்த்து திமுகவிற்கு பயம் வந்துவிட்டதோ? இத்தனை நாட்களாக விசில் பயன்படுத்தும்போது இந்த விழிப்புணர்வு பாடல் பற்றி தோன்றவில்லையோ? விஜய்யின் சின்னம் மக்கள் மத்தியில் போய் சேர்ந்துவிடக்கூடாது என திமுக நினைக்கிறதோ? என்ற சந்தேகங்களை மக்கள் மத்தியில் கிளப்ப, மக்களும் தங்களுக்குள் கிசுகிசுக்கத் தொடங்கியுள்ளனர். மறுபக்கம் அரசின் நடவடிக்கைக்கு போட்டியாக சில பகுதிகளில் தவெகவினர் மக்களுக்கே நேரடியாக விசிலை விநியோகித்து வருகின்றனர். குறிப்பாக இந்த பேச்சு என்பது, சென்னையில் சமீபத்தில் திமுகவினரால் தவெக நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து முக்கியமாக கவனிக்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஒரு போட்டி; பல சாதனைகள்!. நமீபியாவை வீழ்த்தி இந்தியா புதிய வரலாற்று சாதனை!.
    Next Article அண்ணாமலைக்கு மீண்டும் புதிய பொறுப்பு!. அதிருப்திக்கு முற்றுப்புள்ளியா?. நயினார் அறிவிப்பு!.
    Editor web3
    • Website

    Related Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    July 4, 2026

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.