Close Menu
    What's Hot

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
    தமிழ்நாடு

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    Editor web2By Editor web2June 8, 2026Updated:June 8, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Power cut
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு மின்சார வாரிய வரலாற்றில் முதல்முறையாக 300 உதவி பொறியாளர்களுக்கு செயற்பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டதையொட்டி, மின்வாரிய பொறியாளர்கள் சங்கம் சார்பில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு பாராட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மின்வாரியத்தில் நிலவி வந்த டெண்டர் முறைகேடுகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    “கடந்த காலங்களில் டெண்டர் மதிப்பீடுகளில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. 600 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு டெண்டரில் மட்டும் சுமார் 397 கோடி ரூபாய் வரை முறைகேடு நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. 30 முதல் 35 சதவீதம் வரை ஏற்பட்ட நிதி கசிவை தடுக்கும் வகையில் புதிய டெண்டர் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

    புதிய நடைமுறையின்படி, சந்தை விலை மற்றும் உற்பத்தியாளர்களின் நேரடி விலையை அடிப்படையாகக் கொண்டு மூன்று தனித்துவமான குழுக்களின் பரிசீலனைக்குப் பிறகே டெண்டர் மதிப்பீடுகள் தயாரிக்கப்படும் என்றும், அடுத்த வாரம் முதல் மின்சார வாரியம் மற்றும் அதன் அனைத்து பிரிவுகளிலும் இந்த முறை அமல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    30 ஆயிரம் கோடி ரூபாய் வரை  சேமிப்பு

    இந்த நடவடிக்கையின் மூலம் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி முதல் 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு சேமிப்பு ஏற்படும் எனவும், முறைகேடு கண்டறியப்பட்ட முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டு சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

    சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சார இணைப்புகளுக்கான அனுமதி வழங்கும் முறையில் இடைத்தரகர்கள் ஆதிக்கம் செலுத்தியதாகவும், அதை ஒழிக்கும் நோக்கில் புதிய வெளிப்படையான இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் நுகர்வோர்கள் மற்றும் சிறு மின் உற்பத்தியாளர்கள் நேரடியாக ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து அனுமதி பெற முடியும் என்றார்.

    vlcsnap 2026 06 08 18h22m42s187

    திட்டமிட்டு மின்வெட்டு 

    மின்சார விநியோகம் தொடர்பாக பேசிய அமைச்சர், “தமிழகத்தில் தற்போது மின்சாரத் தட்டுப்பாடு இல்லை. உபரி மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பிற்கு விற்பனை செய்து வருவாய் ஈட்டி வருகிறோம். சென்னையில் சில பகுதிகளில் நிலவும் குறைந்த மின்னழுத்தம் மற்றும் மின்வெட்டு பிரச்சினைகளுக்கு பழைய டிரான்ஸ்ஃபார்மர்கள் மற்றும் கேபிள்கள் சேதமடைந்திருப்பதே காரணம். அவற்றை சரிசெய்ய கூடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டு 40 நிமிடங்களுக்குள் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும், சில இடங்களில் திட்டமிட்டு மின்சாரப் பெட்டிகளில் உள்ள பியூஸ்களை அகற்றி மின்வெட்டு ஏற்படுத்தும் நாசவேலைகள் நடைபெறுவதாகவும், சிசிடிவி காட்சிகள் மூலம் அவை கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறிய அமைச்சர், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நிர்மல் குமார் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?
    Next Article ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?
    Editor web2
    • Website

    Related Posts

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    June 8, 2026

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    June 8, 2026

    ”மின்சார வாரியத்தில்  15,000 பேருக்கு வேலை!”

    June 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஓமன் கடற்பகுதியில் இந்தியக் கப்பல் மீது தாக்குதல்? 24 மாலுமிகளின் நிலை என்ன?

    ”திட்டமிட்டு மின்வெட்டு ஏற்படுத்தப்படுகிறது” – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    அடேங்கப்பா!. ராமர் கோயில் நன்கொடை ரூ. 3,000 கோடியை தாண்டியது!. வரி மட்டும் எவ்வளவு தெரியுமா?

    ‘‘சிங்கப் பெண்’’ அதிரடிப் படைத் திட்டம் நாளை (ஜூன் 9) தொடக்கம்!

    ’இந்தியா’ கூட்டணியில் காங்கிரசுக்கு எதிராக வெடித்த திருமா… திமுகவை கூல் பண்ணவா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.