டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தளமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, மார்ச் மாதத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 1,000 கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது.

இதையும் படிக்க: இதையும் படிக்க: தென்மேற்கு பருவமழை.. .24 மணி நேரமும் அவசர மையங்கள் … முதலமைச்சர் அறிவுறுத்தல்!!

இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், பிஆர்ஒ மேகநாதன், தொழிலதிபர்கள் தேவக்குமார், ரித்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. விசாகன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த முக்கிய தகவல்களும் சேகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர் சுமன் மற்றும் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சில தொழிலதிபர்களின் வெளிநாட்டு பயண விவரங்களை விமான நிலையம் வாயிலாக பெற்று, அவர்களையும் விசாரணைக்கு வரவழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.

இதையும் படிக்க: சாம்சங் விவகாரம்.. முத்தரப்பு பேச்சுவார்த்தை வெற்றி.. வாக்குறுதி அளித்த அரசு!

இந்த வழக்கில் அரசியல் தொடர்புகளும் உள்ளதாகவும், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு இந்த நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு சவாலாக மாறும் வாய்ப்பும் இருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply

Exit mobile version