சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 73 பயணிகள் பயணிக்க இருந்தனர்.

ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்பட தயாராக இருந்தப் போது, விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனை உடனடியாக கண்டறிந்த விமானி, ஓடுபாதையிலேயே விமானத்தை நிறுத்தினார். பின்னர் கோளாறு சரிசெய்யப்பட்டு, 1 மணி நேர தாமதத்திற்கு பிறகு விமானம் 6.45 மணிக்கு திருச்சி புறப்பட்டது.

Share.
Leave A Reply

Exit mobile version