Close Menu
    What's Hot

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திமுக அரசின் ஊழலை துறைவாரியாக பட்டியல் போட்ட EPS!. அதிர்ச்சி ரிப்போர்ட்!.
    தமிழ்நாடு

    திமுக அரசின் ஊழலை துறைவாரியாக பட்டியல் போட்ட EPS!. அதிர்ச்சி ரிப்போர்ட்!.

    Editor web3By Editor web3January 6, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    dmk eps ravi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    எதிர்க்கட்சியாக இருந்தபோது பொங்கல் பரிசாக ரூ.5,000 கொடுக்க சொன்ன ஸ்டாலின், தற்போது ரூ. 3,000 மட்டும் கொடுத்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, தற்போது அறிவித்திற்கும் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், ஆளுநர் ஆர்என் ரவியை சந்தித்து திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புகார் அளித்தார். அப்போது, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி, முனுசாமி, CV சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் .

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்து 2021 முதல் திமுக அரசு முறைகேடுகள் ஊழல் குறித்து புகார் அளித்தோம் , திமுக அரசு செய்த ஊழல்கள் அனைத்திற்கும் ஆதாரங்களோடு சமர்ப்பித்திலும் , ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் ,

    56 மாதங்களாக வெளிப்படை தன்மை இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனம் போல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது , கோடிக்கணக்கில் கொள்ளையடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் திமுக அரசு தள்ளியுள்ளது , வருடத்திற்கு 1 லட்சம் கடன் வாங்கி தமிழகத்தை மிக கேவலமாக ஆட்சி செய்து வருகிறது …

    திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக உதயநிதி மற்றும் சபரீசன் மீது ஏற்கனவே அப்போதைய நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது , விஞ்ஞானரீதியான துறை வாதிரியாக ஊழல் நடைபெற்றுள்ளது அதனை ஆதாரங்களோடு நிரூபித்துள்ளோம்…

    துறைவாரியாக ஊழல் : பட்டியலிட்ட எடப்பாடி: 

    நகராட்சி துறை 64,000 கோடி

    ஊரக வளர்ச்சி துறை 60,000கோடி

    கனிம வளத் துறை 60,000கோடி

    எரிசக்தித் துறை 55,000 கோடி

    கலால்வரி (டாஸ்மாக்) துறை 50,000 கோடி

    பத்திரப்பதிவுத் துறை 20,000 கோடி

    நெடுஞ்சாலைத்துறை 20,000 கோடி

    நீர் ஆதாரத் துறை 17,000 கோடி

    சென்னை மாநகராட்சி 10,000 கோடி

    தொழிற் துறை 8,000 கோடி

    பள்ளிக் கல்வித்துறை , மக்கள் நல்வாழ்வுத் துறை , வேளாண்மைத் துறை தலா 5,000 கோடி என பல்வேறு துறைகளில் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன , ஆட்சியில் நிர்வாகம் சீராக இல்லை , மக்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை , சட்டம் ஒழுங்கு சீராக இல்லை , தமிழகத்துடைய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்று விட்டது 4 லட்சம் கோடி பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுகிறது . திமுக அரசின் ஊழல் புகார் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெற வேண்டும் என்றார் .

    இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு என் மீது வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளை தவறானது என நிரூபித்து நிரபராதி என்ற பெயரோடு தான் இங்கே நிற்கிறேன் , கிட்னி திருட்டு விவகாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என கேள்வி எழுப்பினார்

    மேலும் திமுக அரசு காலம் தாழ்த்தி லேப்டாப் வழங்கி இருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமே , மாணவர்களின் எதிர்காலம் குறித்த நோக்கம் இல்லாமல் தேர்தல் நோக்கத்திற்காக மட்டுமே லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது

    ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது 5000 ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்தார் , அதையேதான் நானும் தற்போது வலியுறுத்தி வருகிறேன் , தற்போது பொங்கல் பரிசு 3000 ரூபாய் என்ற அறிவிப்பு தேர்தலை மையப்படுத்தி தேர்தல் வாக்குகளை பெறுவதற்காக மட்டுமே எனவும் குறிப்பிட்டார் .

    ஆசிரியர்கள் செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் என திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டுமென தொடர்ச்சியாக போராடி வருகின்றனர் , தமிழகம் இன்று போராட்டக் களமாக மாறிவிட்டது . திமுக அரசு வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி , அதிமுக பெரும்பான்மை தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் என்றார்

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜனவரி 9ம் தேதி தொடங்கும் WPL!. எங்கு நடக்கிறது?. முழுவிவரம் இதோ!.
    Next Article ஜனநாயகன் படக்குழு அவசர மனு தாக்கல்!. ஐகோர்ட்டில் 2 மணிக்கு விசாரணை!.
    Editor web3
    • Website

    Related Posts

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    June 3, 2026

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    June 3, 2026

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    June 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இந்தியாவுக்கு அமெரிக்கா மேலும் வரி… ஏற்றுமதிக்குப் பின்னடைவா?  

    மம்தா கட்சியில் பிளவு… மேற்குவங்கத்திலும் வேலையைக் காட்டியதா பாஜக?

    எம்.பி. சீட்  அரசியல்… திமுகவைச் சீண்டுகிறதா காங்கிரஸ்?

    காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீடு!. தவெக அதிரடி அறிவிப்பு!

    கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு… நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.