Close Menu
    What's Hot

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது EPS-ன் தோல்வி பயம்!. செங்கோட்டையன் அட்டாக்!
    தமிழ்நாடு

    தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது EPS-ன் தோல்வி பயம்!. செங்கோட்டையன் அட்டாக்!

    Editor web3By Editor web3February 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps sengottaiyan 313007489 16x9 0
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு தோல்வி பயம் வந்துவிட்டதை புரிந்துகொள்ளவேண்டும் என்று செங்கோட்டையன் விமர்சித்துள்ளார்.

    கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தமிழக வெற்றி கழகத்தில் என்ஜின் இல்லை என்று பேசியது தொடர்பாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழக வெற்றி கழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்கள் முடிவு செய்து விட்டார்கள், இரண்டு இயக்கங்களே இந்த நாட்டை ஆள வேண்டுமா புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணங்களோடு தான் இந்த இயக்கம் தற்பொழுது வீர நடை போட்டு கொண்டிருக்கிறது.

    பல கோடி ரூபாய் வருவாயை இழந்தாலும் விஜய் மக்கள் பணியாற்றுவதற்காக ஒரு இளைஞர் என்ற முறையில் வந்திருக்கிறார், அவரை பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம் என்னவென்றால் எல்லோருக்கும் பயம் ஏற்பட்டு இருக்கிறது. வெற்றி என்ற இலக்கை அடைய முடியாத காரணத்தினால் தான் அனைவரும் (அரசியல் கட்சிகள்) கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    ஒரு புதிய தலைமை தமிழகத்தை ஆள வேண்டும். குறிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆள வேண்டும் என்ற நோக்கம் புதிதாக வாக்களிக்க கூடிய ஒவ்வொருவரின் எண்ணங்களிலும் உள்ளது. 35 வயதுக்கு கீழ் உள்ள அனைவரது ஒருமித்த கருத்தாகவும் அது பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது. மேலும் நான் சில நிகழ்ச்சிகளுக்கு செல்கின்ற பொழுது குழந்தைகள் அவர்களது பெற்றோர்களிடத்தில் பெரியவர்களிடத்திலும் விஜய்க்கு வாக்களிக்க வேண்டும் என்று வற்புறுத்துவதாக எங்களிடம் கூறினார்கள்.

    வெற்றி என்பது மக்கள் சக்தியால் யாராலும் தடுக்க இயலாது. விஜய் தான் 2026 இல் தமிழகத்தின் முதலமைச்சராக வருவார், 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    அதிமுக நேரடியாக தமிழக வெற்றிக் கழகத்தை விமர்சிக்க தொடங்கியுள்ளது குறித்தான கேள்விக்கு அதற்கு காரணம் அவர்களது தோல்வி பயம் தான். தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால் தான் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி இரண்டு சட்டங்களாக வெளியிட்டது குறித்து பேசிய அவர் தேர்தல் அறிக்கை என்பது மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து தேர்தல் அறிக்கை கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றால் எவ்வளவு தோல்வி பயம் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇன்று DCW vs RCBW இறுதிப் போட்டி!. வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?
    Next Article உஷார்!. கொத்துக்கொத்தாக செத்து மடியும் காகங்கள்!. கையால் தொடாதீர்கள்!. அதிரடி உத்தரவு!
    Editor web3
    • Website

    Related Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    July 6, 2026

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    திருச்சி : காதல் திருமணம் செய்த பெண்ணை கடத்திய பெற்றோர்..! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த போலீசார்..!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.