தஞ்சை கூட்டத்தில் பேசிவரும் தவெக தலைவர் விஜய், தொடர்ந்து 2வது  முறையாக திமுக ஆட்சிக்கு வந்ததாக சரித்திரமே இல்லை என பேசியுள்ளார். திமுகவை தொடர்ச்சியாக 2வது முறை ஆட்சிக்கு கொண்டுவர கருணாநிதியால் கூட முடியவில்லை என்ற அவர், நீட் தேர்வை ரத்து செய்யமுடியாது என  தெரிந்தே திமுக வாக்கு கொடுத்ததாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் மோசடி ஆட்சியில் முன்மாதிரியான ஆட்சி; முக்கியமான ஆட்சி என திமுக அரசு மீது கடுமையாக விமர்சனத்தை முன்வைத்தார்.

மேலும் மணலைக் கொள்ளை குறித்து பேசி அவர், மணல் மாஃபியாவுடன் திமுகவுக்கு உறவில்லை என்று சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார். மேலும் ஒட்டுமொத்தமாக இந்த முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது என்று கூறினார்.

மேலும் சமீப காலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து  வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன் மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version