Close Menu
    What's Hot

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மாணவிகள் பள்ளியில் மது அருந்துகின்றனர்; அப்பா ஸ்டாலினுக்கு கவலையே இல்லை!. இபிஎஸ் வேதனை!
    தமிழ்நாடு

    மாணவிகள் பள்ளியில் மது அருந்துகின்றனர்; அப்பா ஸ்டாலினுக்கு கவலையே இல்லை!. இபிஎஸ் வேதனை!

    Editor web3By Editor web3March 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    eps angry
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, “இன்றைய தினம் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி பொறுப்பு ஏற்று ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.

    இந்த ஐந்து ஆண்டு காலத்தில் தமிழக மக்கள் பட்ட துன்பம் ஏராளம். ஒவ்வொரு நாளும் மக்கள் படுகின்ற துன்பம் பற்றி ஆட்சியாளர்கள் கவலை படாமல் உள்ளனர். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று ஸ்டாலின் சொல்வார். எதில் முதல் மாநிலம் கடன் பெறுவதில் முதல் மாநிலமாக உள்ளது. இந்த கடனை எல்லாம் நாம் தான் அடைக்க வேண்டிய சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ஒரு வருடத்திற்கு 1408 கொலைகள் நடந்துள்ளது. 2026 இல் மொத்தமாக 110 கொலைகள் நடைபெற்றிருக்கிறது. பிப்ரவரியில் 84, மார்ச் மாதம் 52 என கடந்த 75 நாட்களில் மொத்த கொலை 246 கொலைகள் நடைபெற்றிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
    மேலும், போதைப் பொருள், கஞ்சா, கள்ளச்சாராய விற்பனை கிராமம் முதல் நகரம் வரை ஜரூராக நடக்கிறது. இதைப்பற்றி கவலைப்படாத பொம்மை முதல்வர், கட்டுபடுத்த திராணியற்ற, திறமையற்ற முதல்வர். நம் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைக்க படிக்க வைக்கிறோம், எவ்வளவோ கஷ்டத்துக்கு இடையில் படிக்க வைக்கிறோம் ஆனால் இந்த ஆட்சியில் பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்பனையாவதால் மாணவர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்.  மாணவர்கள், இளைஞர்கள் பொதுமக்கள் சீரழிவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கும்போது நெஞ்சம் பதறுகிறது.

    திருநெல்வேலியில் 9ம் வகுப்பு மாணவிகள் பள்ளியில் மது அருந்துகிறார்கள். பள்ளியில் மாணவிகள் மது அருந்தும் வேதனையான சம்பவம் பற்றி அப்பா ஸ்டாலின் கொஞ்சமும் கவலைப்படவில்லை.போதைப்பொருள் விற்பனை அதிகரித்தபோது உளவுத்துறை விழிப்போடு இருந்து தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், தமிழக உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்துக்கு ஏவல் செய்யும் துறையாக இருக்கிறது. உளவுத்துறை செயல் இழந்துவிட்டது.

    போதை ஆசாமிகளை பிடிக்கச் செல்லும் காவலர்களை குற்றவாளிகள் தாக்குகின்றனர், காவலர்களுக்கே பாதுகாப்பில்லை. சில இடங்களில் கைதுசெய்ய முற்படும்போது கத்தியைக் காட்டி போலீஸை மிரட்டுகிறார்கள். மக்களைக் காக்கும் போலீஸுக்கும் பாதுகாப்பில்லை, மக்களுக்கும் பாதுகாப்பில்லை.

    சென்னை மாநகரில் பட்டப்பகலில் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்படுகிறார், இன்றுவரை குற்றவாளிகளை பிடிக்க முடியவில்லை. அதேபோல் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் நெல்லை மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்துக் கொலை செய்யப்பட்டார், அந்த குற்றவாளிகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    15 நாட்களுக்கு முன்பு நான்குநேரியில் போதை ஆசாமிகள் மக்களை வெட்டுகின்றனர், இருவர் படுகொலை. சிவகங்கை மாவட்டத்தில் சாலையோரம் நின்றவர்களை போதை ஆசாமிகள் வெட்டுகின்றனர். பாலியல் வன்கொடுமை நடக்காத நாளே இல்லை. கிருஷ்ணகிரியில் திமுகவைச் சேர்ந்தவர் 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தார். குமாரபாளையத்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.

    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 68 பேர் மரணம் அடைந்தனர். அதற்கு ஆளும் கட்சியினர் உடந்தை, அதனால் சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக வழக்குப்போட்டது நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. விடியா திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு திமுக அரசு துணை நிற்பது நிரூபணமாகியிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஈரான் உச்ச தலைவர் ஓரினச்சேர்க்கையாளரா?. அமெரிக்க உளவுத்துறையின் பகீர் ரிப்போர்ட்!. டிரம்பின் ரியாக்சன்!.
    Next Article ஒரு நாளைக்கு ரூ.15 கோடி… 4 வருடத்திற்கு ரூ.24,000 கோடி!. திமுகவின் டாஸ்மாக் ஊழலால் இபிஎஸ் கொந்தளிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    June 21, 2026

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    June 21, 2026

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடுத்த மாதம் தமிழகம் வருகிறாரா அமித் ஷா? பாஜகவில் தீவிர ஆலோசனை!

    மேகதாது அணைக்கு எதிராக ஜூலை 2 முதல் 3 நாட்கள் நடைபயணம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

    “திமுக-அதிமுக ஒன்றானாலும் ஆச்சரியமில்லை”… பரபரப்பைக் கிளப்பும் சிபிஎம் சண்முகம்

    வாடி வாடி கைபடாத சிடி ; தவெக பெண் நிர்வாகியுடன் அமைச்சர் விஸ்வநாதன் குத்தாட்டம்

    பேருந்தில் சிறுமியிடம் அத்துமீறல்: ஆத்திரத்தில் பொதுமக்கள் சரமாரி தாக்குதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.