Close Menu
    What's Hot

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதவெறிக்கு எதிராக களமாடுங்கள் – விஜய்க்கு ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தல்
    தமிழ்நாடு

    மதவெறிக்கு எதிராக களமாடுங்கள் – விஜய்க்கு ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003j ja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின்  நலன் காக்க, மதவெறி ஃபாசிசத்துக்கு எதிராக தொடர்ந்து களமாட வேண்டும் என தவெக தலைவர் விஜய்க்கு மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

    அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;-

    தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை வென்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர். விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    திராவிடம் மாடல் தி.மு.க‌. அரசு 2021 முதல் 2026 வரை மிகச் சிறப்பான நல்லாட்சியை மக்களுக்கு தந்தது என்பது மறக்க முடியாத உண்மை.

    திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்தையும் தனி மனிதரையும் பல வழிகளில் சென்றடைந்து பயன் நல்கியுள்ளன.

    உயர்கல்வியில் இந்தியாவின் முதல் இடத்தை தமிழ்நாடு அடைவதற்கும் தரமான பள்ளிக்கல்வியை ஏழை, எளிய மக்களின் பிள்ளைகள்  பெறுவதற்கும் தி.மு.க. அரசு செயல்படுத்திய திட்டங்கள் காரணமாக இருந்தன.

    தமிழ்நாட்டை இந்திய மாநிலங்களில் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியில் முன்னேற்றியது திமுக ஆட்சி. ஒன்றிய அரசின் ஆவணங்களே அதற்கு சாட்சி

    தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை பறிப்பதற்கும் பொருளாதாரத்தை நசுக்குவதற்கும்  இந்தியை நம் மீது திணிப்பதற்கும் மத வெறி ஃபாசிசக் கூடாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கும் ஒன்றிய பாஜக அரசு செய்த சூழ்ச்சிகளை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எதிர்த்து நின்றார்.

    ஒன்றிய பாஜக அரசின் ஓயாத இடையூறுகளை மீறியே தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையிலும் நாகரிக அரசியலிலும் அவர் வழி நடத்தி வந்தார் என்பது ஆணித்தனமான உண்மை

    இப்போது தமிழ்நாட்டு மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அதிக இடங்களில் வெற்றியை தந்துள்ளனர்.

    ஃபாசிச கோட்பாடு கொண்ட பாஜகவை விஜய் தனது கொள்கை எதிரி என்று பிரகடனம் செய்துள்ளார். ஆயினும் தேர்தல் பரப்புரைகளிலோ மற்ற கூட்டங்களிலோ ஃபாசிச பாஜகவின் மதவெறி போக்கு குறித்து மௌனம் சாதித்து வந்த விஜய் இனியாவது மனந்திறக்க வேண்டும்.

    மக்கள் நலன் பேணுவதிலும் மாநில உரிமைகளை காப்பதிலும் மதவெறி ஃபாசிச பாஜகவுக்கு அணுவளவும் பணிந்து விடாமல் உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சி விடாமல் மதச்சார்பற்ற சகோதரத்துவ சமாதான தமிழகச் சூழலை பேணிக்காக்க. விஜய்  முன்னிருக்க வேண்டுமென இந்நேரத்தில் வலியுறுத்துகிறேன்.

    தமிழக வெற்றிக் கழகம் தமிழக நலம் காக்கும் வகையில் ஃபாசிச பாஜகவை முறியடிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட வாழ்த்துகிறேன் என அறிக்கையில் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleயாருக்குமே எட்டாத வெற்றி கனி!. ஸ்டாலின், EPS, விஜய்க்கு இப்படியொரு சோதனையா?.
    Next Article போடு…. அதிரடி டுவிஸ்ட்!. விஜய்க்கு ஆதரவு கரம் நீட்டும் இபிஎஸ்?. அதிமுகவின் திடீர் வியூகம்!
    Editor TN Talks

    Related Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    வெளிநாட்டு பயணங்களுக்கு கூடுதல் வரி விதிப்பா?. பிரதமர் மோடி விளக்கம்!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.