திருப்பூரில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் பொருத்திய 12 அரசு பேருந்துகள், 4 தனியார் பேருந்துகளுக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிகப்பட்டது.
திருப்பூரில் இயக்கப்படும் தனியார், அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் ஏழு மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடத்திய சோதனையில் 41 பேருந்துகளை ஆய்வு செய்ததில் 12 அரசு பேருந்துகளும், 4 தனியார் பேருந்துகள் என மொத்தம் 16 பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து 16 ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 1.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. போக்குவரத்து அதிகாரிகள் திடீர் ஏர் ஹாரன் குறித்து வாகன சோதனையில் ஈடுபட்டதால் மத்திய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
