தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் (மார்ச் 28) அன்று சென்னையில் தொடங்கவுள்ளார். மற்ற கட்சிகளுக்கு சவால் விடும் வகையில், ஒரே நாளில் ஐந்து முக்கியத் தொகுதிகளில் பிரசாரம் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், அண்ணா நகர் மற்றும் விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளை அவர் குறிவைத்துள்ளார். தான் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பெரம்பூர் தொகுதியில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி, அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த கொளத்தூர் வரை அவரது பிரசாரப் பயணம் நீளும் எனத் தெரிகிறது.

முன்னதாக, தவெக சார்பில் நாளை (மார்ச் 27) மாமல்லபுரத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பிரசாரப் பயணத்திற்காகத் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் விரிவான அனுமதி மனு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 28 அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த நிகழ்வை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரசார இடத்திலும் சுமார் 3,000 பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி மக்களிடையே உரையாற்றவும், முக்கிய சந்திப்புகளில் தொண்டர்களைச் சந்திக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version