நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக வெளியிட்டுள்ள தொலைநோக்குத் திட்டங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழகத்தின் வளர்ச்சியைப் பரவலாக்கும் வகையில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை, குமரி என 5 புதிய தலைநகரங்களை அவர் அறிவித்துள்ளார்.
திருச்சி: நிர்வாகத் தலைநகரம் (The Administrative Capital)
தமிழகத்தின் மையப்பகுதியாக விளங்கும் திருச்சி, மாநிலத்தின் முதன்மை நிர்வாக மையமாக மாற்றப்படும். வட மற்றும் தென் மாவட்ட மக்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் இந்த மாற்றம் திட்டமிடப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம்: முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சகங்கள் இங்கிருந்து செயல்படும்.
சட்டமன்றம்: மாநிலத்தின் சட்டமியற்றும் பணிகள் திருச்சியில் நடைபெறும்.
மத்திய கண்காணிப்பு: 38 மாவட்டங்களையும் கண்காணிக்கும் பொது நிர்வாக மையம் மற்றும் மாநிலத் திட்டக் குழு இங்கு அமையப்பெறும்.
சென்னை: தொழில்நுட்பத் தலைநகரம் (Tech Capital)
நிர்வாகப் பளுவைக் குறைத்து, சென்னையை இந்தியாவின் மும்பை அல்லது சீனாவின் ஷாங்காய் போல சர்வதேசத் தரத்திலான பொருளாதார மையமாக மாற்றுவதே இதன் நோக்கம்.
IT & மென்பொருள்: தகவல் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதிக்கான முதன்மைத் தளமாகத் தொடரும்.
கலை மற்றும் ஊடகம்: திரைக்கலை மற்றும் ஊடகத்துறையின் தலைமையகமாகச் செயல்படும்.
வணிகம்: சர்வதேசத் துறைமுக வர்த்தகம், நிதி மற்றும் வங்கிச் சேவைகளுக்கான நுழைவாயிலாகச் சென்னை திகழும்.
கோவை: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம் (Industrial & Business Capital)
ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் அல்லது இத்தாலியின் மிலன் நகரங்களைப் போல, கோவை மாநிலத்தின் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக மாற்றப்படும்.
MSME மேம்பாடு: சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை உலகத் தரத்திற்கு உயர்த்துதல்.
தொழில் மேலாண்மை: புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதி மற்றும் மேலாண்மைப் பணிகள் இங்கிருந்து கவனிக்கப்படும்.
நெசவு மண்டலம்: திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நெசவுத் தொழில்களை ஒருங்கிணைக்கும் மையமாக கோவை விளங்கும்.
பெண்களுக்குத் தனித்தொகுதி: உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் மற்ற கட்சிகளும் பெண் வேட்பாளரை நிறுத்துவதில்லை. இதனால் பெண்களுக்கான உரிமையும் பறிக்கப்படுகிறது. எனவே பெண்களுக்குச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் (பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல்) தனித்தொகுதிகள் போராடிப் பெறப்படும். இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கான நிகர்நிலைக் கிடைக்கும்.
மூன்று சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றம்: விடுதலையடைந்தபோது மக்கள் தொகை முப்பது கோடிதான். 1952இல் இரட்டை உறுப்பினர்கள் கொண்ட தொகுதிகள் உள்பட 489 மக்களவைத் தொகுதிகள்.
மாநிலத்தில் தன்னாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி
இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில், “கூட்டாட்சித் தத்துவம்” என்பது பெயரளவே உள்ளது. இந்திய ஒன்றிய அரசியலமைப்புச் சட்டம் 7.ஆவது பட்டியலில் உள்ள சட்டமியற்றுகின்ற முறையில், ஒன்றிய அரசு 97 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தினையும், மாநில அரசு 66 துறைகளில் சட்டமியற்றும் அதிகாரத்தினையும் பெற்றிருக்கின்றது.
மாநில அரசுக்கு அதிகாரம்
இது தவிர ஒன்றிய, மாநில அரசுகள் சேர்ந்து 47 துறைகளில் சட்டம் இயற்றலாம் என்றிருக்கின்றது. ஆக, ஒன்றிய அரசிடம் 144 துறைகளில் சட்டம் இயற்றுகிற அதிகாரம் உள்ளது. இது ஒன்றியத்தில் ஒற்றையாட்சி முறையையும், தன்னதிகார குவிப்பினையும் உறுதி செய்கிறது.
எனவே நாம் தமிழர் ஆட்சியில் ஒன்றியத்தில் கூட்டாட்சி, மாநிலத்தில் தன்னாட்சி என்ற முழக்கத்தோடு அனைத்து வகையான துறைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசிற்கு ண்டு என்கிற வகையில் இந்திய ஒன்றிய அரசியலைப்புச் சட்டத்தில் உரிய மாற்றம் கொண்டு வரப் பாடுபடுவோம்.
தொடர்வண்டி நிருவாகம்
மாநில எல்லைக்குள் பயணிக்கும் தொடர் வண்டி நிருவாகத் துறையினை நாம் தமிழர் அரசு இந்திய அரசியலைப்புச் சட்டமாற்றம் மூலம் கையகப்படுத்தும். ஒன்றிய அரசிற்கு படைத்துறை, நாணயம், உள்ளூர்த் தொடர்வண்டி நீங்கலாக மாநிலங்களுக்கிடையேலான பயணிக்கிற தொடர்வண்டி, மாநில அரசின் ஒப்புதலோடு கூடிய வெளியுறவுத்துறை போன்ற துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் சட்டமியற்றி, நடைமுறைப்படுத்துகிற உரிமை மாநில அரசிற்கே உண்டு என்கிற நிலையை உரிய சட்ட மாற்றங்கள் மூலம் ஏற்படுத்த நாம் தமிழர் அரசு பாடுபடும்.
நீதி மேலாண்மை
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்களின் சட்டமன்றம், நாடாளுமன்றம் இயற்றுகின்ற சட்டங்களையும், திட்டங்களையும், தடை செய்து நிறுத்தி வைக்கிற நீதிமன்ற மேலாண்மை நம் அரசியலைப்பு முறையில் அதிகம் உள்ளது. எடுத்துக்காட்டாக எழுவர் விடுதலை, மீத்தேன், கெயில், கூடங்குளம் போன்ற சிக்கல்களில் உச்சநீதிமன்றத்தின் செயல்பாடு மாநில அரசின் உணர்விற்கு எதிராக இருக்கின்றது. இந்த நிலையை மாற்ற வேண்டும். நீதிமன்ற மேலாண்மையைக் குறைத்து, மக்கள் உணர்வுகளுக்கு, மக்களாட்சிக்கு மதிப்பளிக்கக்கூடிய, உரிய சட்ட மாற்றங்களைக் கொண்டுவரத் தகுந்த முயற்சிகளை முன்னெடுப்போம்.
