Close Menu
    What's Hot

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!
    தமிழ்நாடு

    சி.வி.சண்முகத்தை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய திண்டுக்கல் சீனிவாசன்!. பெண்கள் உடை குறித்து பேச்சு!

    Editor web3By Editor web3March 17, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Dindigul Srinivasan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நயன் தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு சி.வி.சண்முகம் மீது கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், பெண்களின் உடை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மோசமான, கேவலமான ஒரு ஆட்சி இன்னும் 30 முதல் 45 நாட்கள் இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாள் தமிழகத்தின் NDA கூட்டணியில் தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது அத்தனை பீடையும் அத்தனை சனியனும் தொலைந்து போய்விடும்.

    தூத்துக்குடி சகோதரிக்கு நடந்த கொடுமையை கேட்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தங்கை கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் சென்றபோது வெளியே செல்லுங்கள் என்று கூறி முதலமைச்சரின் தங்கையை வெளியேற்றுகின்றனர். இந்த ஆட்சி கேவலமானது என்பதற்கு தூத்துக்குடியில் இருந்து கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனை வெளியேற்றியதே சாட்சி என்றார்.

    மேலும், சிறிய பள்ளிக்கூடம் படிக்கும் பிள்ளைகளுக்கும் மிட்டாயில் கஞ்சாவை கடத்தி அதில் வைத்து விற்கின்றனர். இதற்கு எதிராகவே தற்போது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர்.

    192 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் ஆனால் முதல்வர் ஒரு இடத்திற்காவது சென்றிருப்பாரா என்றால் கிடையாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது போல் அரசு பணத்தை எடுத்து பெரிய பெரிய ஊர்வலம், மாநாடு நடத்தி செலவழித்துக் கொண்டிருக்கிறார்.

    அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு பூத்திலும் எச்சரிக்கையாக இருங்கள் அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.

    திமுக எங்கு பார்த்தாலும் சிலிண்டர் கிடைக்கவில்லை என போராடி வருகின்றனர். சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா – வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்.

    உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி LPG சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி.

    நரேந்திர மோடி அவர்களின் சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல் டீசல் கேஸ் எதுவும் பிரச்சனை இன்றி கிடைத்து வருகிறது. நான்கு வருடம் 11 மாதம் எந்தவித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டு வந்தார். ஜெயலலிதா அவர்கள் மற்றும் கருணாநிதி அவர்கள் இருக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக கூட திமுகவால் வர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆசியுடன் பாமக கூட்டணியுடன் 75 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த வருகிறோம்.

    தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    திமுக – பாஜகவின் வாஜ்பாயுடன் கூட்டணி வைக்கும் பொழுது சரியான கூட்டணி என்றும் தற்போது அதிமுக – பாஜக வைத்துள்ள கூட்டணியை மோசமானது மற்றும் மூழ்கின்ற கப்பல் என முதலமைச்சர் கூறுகிறார். எந்தக் கப்பல் மூழ்கினாலும் அதனை வெளியே எடுத்து வருகின்ற நீர் மூழ்கிக் கப்பல் அதிமுக.

    ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கோ பேக் என மோடி அவர்களை கூறினார்கள் ஆனால் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற போது காலில் விழுந்து பதவி ஏற்று வைக்க கோரியவர்கள் தான் திமுகவினர். மோடி அரசு 11 லட்சம் கோடி திமுக விற்கு கொடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் இருந்த போது மூன்றில் ஒரு பங்கு கூட நிதியாக கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅடுத்தடுத்த அதிர்ச்சி!. ஈரானின் முக்கிய தலைவர் அலி லரிஜானி கொலை? இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு!
    Next Article பெரம்பூரில் மோதும் சேகர்பாபு vs விஜய்?. பரபரக்கும் அரசியல் களம்!
    Editor web3
    • Website

    Related Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    June 20, 2026

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    June 20, 2026

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    June 20, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சேப்பாக்கத்தில் மிரட்டிய இந்திய பந்துவீச்சு! 218 ரன்களில் சுருண்டது ஆப்கானிஸ்தான்!

    நீட் தேர்வு தேவையில்லை; மாணவர்களுக்காக மனம் திட்டம் – அமைச்சர் அருண்ராஜ்

    தவறுகளை மறைக்க புது பிரச்சனைகளை திமுக உருவாக்குகிறது – அமைச்சர் விஜய்பாலாஜி குற்றச்சாட்டு

    ஈரான்: ஹிஜாப் அணியாமல் பாடிய பாடகிக்கு 74 சவுக்கடி தண்டனை..!! வலுக்கும் எதிர்ப்பு..!!

    ஒரே பவுலர்… ஒரே ஃபீல்டர்… ஹாட்ரிக் கேட்ச்!. ரோகித் – பிரசித் கிருஷ்ணா அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.