ரேஸ் என்ற பெயரில் தாறுமாறாக பைக் ஓட்டுவது ஏற்புடையது அல்ல என்று முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார்.

‘எலிஃபண்டைன் சர்க்யூட்’ என்கிற தனியார் அமைப்பு நடத்தும் ‘சைக்ளோத்தான்’ நிகழ்வு சென்னை அடையாறில் நடைபெற்றது. இதில், கலா அறக்கட்டளையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட சிறப்பு குழந்தைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சைக்கிள் ஓட்டினர். மேலும், இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சைக்ளோத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஒவ்வொரு குடும்பத்திலும் அப்பா, அம்மா, குழந்தைகள் என அனைவரும் சைக்கிளை எடுத்து பயணம் செய்யுங்கள். முதலில், 5 கி.மீ என ஆரம்பித்து, அதை படிப்படியாக உயர்த்திக் கொள்ளலாம். இந்த சைக்ளோத்தானில் சிறப்பு குழந்தைகள் பங்கேற்றுள்ளது வரவேற்கதக்கது. மனம் சம்பந்தப்பட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு சைக்கிள் ஓட்டுவது நல்ல மருந்தாக இருக்கிறது. புத்துணர்ச்சியை அதிகளவு கொடுக்கக்கூடியது சைக்கிளை ஓட்டுவது தான்” என்றார்.

பைக்கைவிட சைக்கிள் ஓட்டுவதே நல்லது

ஆனால், நம் ஊரில் இமயமலைக்கு காரில் செல்வதையே பெரிய விஷயமாக பார்க்கிறோம். மூன்று, நான்கு நாட்கள் என தொடர்ச்சியாக அவர்கள் சைக்கிள் ஓட்டுவது அவர்களது மனஉறுதியைக் காட்டுகிறது. அந்த வகையில் மோட்டார் சைக்கிளை ஓட்டுவதை விட, சைக்கிளை ஓட்டுவதே நல்லது,” என்றார்.

’சைலன்சர் பாபு’

மேலும் பேசிய அவர், “இன்றைய காலகட்டத்தில் ஒரு சிலர் தாறுமாறாக பைக்கை ஓட்டி செல்கின்றனர். இதனால், பைக் ஓட்டி செல்பவர்களுக்கும் ஆபத்து, சாலையில் செல்பவர்களுக்கு ஆபத்து. மோட்டார் சைக்கிளில் ரேஸ் என்கின்ற பேரில் வருகிறார்கள். இது ஏற்புடையது அல்ல. அவர்களுக்கு சாலைவிதி சுத்தமாக தெரிவதில்லை.

நான் கோயமுத்தூரில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றியபோது ஒரே நாளில் 30 பேரை பிடித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தேன். அதைப் பார்த்த பலரும், இவர் ‘சைலேந்திரபாபு இல்லை, சைலன்சர் பாபு’ என எனக்கு பட்டமே கொடுத்தார்கள். மேலும், நகரத்திற்குள் மோட்டார் சைக்கிளில் ரேஸ் போவது ஏற்புடையதல்ல. அப்படி செய்யக்கூடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும். எதிர்காலம் நிச்சயமாக சைக்கிளை நம்பியிருக்கிறது” என்று சைலேந்திரபாபு கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version