இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாத்ரே தலைமையிலான இந்திய அணியும், யூசப் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மாத்ரே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் சமீர் 172 ரன்கள் குவித்து ஆவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 26.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளையோர் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் வென்றது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version