விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, திண்டுக்கல்லில் உள்ள 32 அடி உயர மகா கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கோபாலசமுத்திரக் கரையில் ஒரே கல்லிலான 32 அடி விநாயகர் சிலை அமைந்துள்ளது. ஆசிய கண்டத்திலேயே மிக உயரமான இந்த மகா கணபதிக்கு சதுர்த்தியை ஒட்டி, பால், பன்னீர், தயிர், இளநீர் உட்பட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒளி ஊட்டும் வகையிலான பண்டைய கால பாரம்பரிய முறைப்படி 1008 காமாட்சி அகல் விளக்கு, ஐந்து முக குத்து விளக்குகளால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இதேப் போல் கோயிலில் உள்ள 108 விநாயகருக்கும் அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனை அடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை வணங்கி சென்றனர்.