சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் தொற்று பரவி வருவது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தவெக தலைவர் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில்,  டாக்டர் கே.ஜி.அருண்ராஜுக்கு, சுகாதாரம், மருத்துவக்கல்வி மற்றும் குடும்ப நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

அவர் தனது அமைச்சரவைப் பணிகளைச் செய்யத் தொடங்கியுள்ளார்.  தலைமைச் செயலகத்துக்கு வந்த அவரை, துறை சார்ந்த அதிகாரிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலாளர் தரேஸ் அகமது உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன் அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தற்போது, சென்னையில் குதிரைகளுக்கு கிளாண்டர்ஸ் தொற்று பரவி வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும், அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version