சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் 92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களுடன் விற்பனையாகிறது. நேற்று முன்தினம் (நவ. 22) தங்கம் விலை கிராமுக்கு, ரூ.170 அதிகரித்து ரூ.11,630-க்கு விற்பனையானது. சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து ரூ.93,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் போன்றே வெள்ளி விலையும் உயர்வுடன் காணப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.3  அதிகரித்து ரூ.172-க்கு விற்பனையானது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்தநிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (நவ. 24) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சரிவுடன் தொடங்கி உள்ளது. தங்கம் ஒரு சவரன் ரூ.880 குறைந்து ஒரு சவரன் ரூ.92,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.110 குறைந்து, ரூ.11,520-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.1 குறைந்து  ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version