கடந்த சில நாட்களாக உச்சத்தில் சென்ற ஆபரணத் தங்கம் விலை இன்று ரூ.640 குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று வெகுவாக சரிந்துள்ளது.

தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.1,04,160 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.88 குறைந்து ரூ. 13,100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று முன் தினம் சனிக்கிழமை (டிச.27)  ஒரு கிராம் தங்கம் ரூ. 14,291க்கும், ஒரு சவரன் ரூ.104,800 க்கும் விற்பனை ஆனது. இந்தநிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்று இறங்கியதே இதற்குக் காரணம் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.4 குறைந்து ரூ.281-ஆகவும், கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.2,81,000-ஆகவும் விற்பனை. தொழில்துறை தேவை சற்று குறைந்ததால் வெள்ளி விலை இறங்கியுள்ளது. ஆய்வகங்கள், தொழில் வட்டாரங்கள், வெள்ளிப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் இந்த குறைவால் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version