தங்கம் விலை இன்று(பிப்.11) சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800 விற்பனையாகிறது.

தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் அதிகரித்து வந்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 29ம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.9,520 அதிகரித்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்து 400 என்ற இமாலய உச்சத்தை எட்டியது.  இருப்பினும், சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்திருந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.

நேற்று (பிப்.10) சவரனுக்கு ரூ.560 குறைந்து சவரன் ரூ.1 லட்சத்து16,640 க்கும், ஒரு கிராம் ரூ.14,580-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இன்று (பிப்.11) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கும் சவரன் ரூ.160  அதிகரித்து ரூ.1,16,800க்கும் விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை மாற்றமின்றி இன்று ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ  ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version