தங்கம் விலை சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,200 உயர்ந்து ரூ.1,24,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலையில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.370 அதிகரித்து ஒரு கிராம் ரூ.15,330க்கும், ரூ.2,960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,22.640 க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த அதிர்ச்சியாக பிற்பகலிலும் சவரனுக்கு மேலும் ரூ.2,240 உயர்ந்து ரூ.1,24,880க்கும், ஒரு கிராம் தங்கம் விலை கிராமுக்கு ரூ.650 உயர்ந்து ரூ.15,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி கூட்டம் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இன்று வரி விகித அறிவிப்பு வெளியாகவுள்ளது. இந்த வட்டி விகித முடிவுதான் தங்கத்தின் விலை எப்படி இருக்கும் என்பதை முடிவு செய்யும். வட்டி விகிதம் குறைந்தால் தங்கம் விலையானது பெரிய அளவில் மாறும். அதேநேரம் டாலர் பலவீனமடைந்து வருவதால் வட்டி விகிதம் உயர்ந்தால் தங்கம் விலை கணிசமாக உயரும் இந்திய நேரப்படி நள்ளிரவில் இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இந்தநிலையில், விண்ணை முட்டும் வேகத்தில் உயர்ந்துக்கொண்டே செல்லும் தங்கத்தின் விலை குறையுமா என்று மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version