சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றுசவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.8,000 அதிகரித்து புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. அதன்படி இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது. தங்கம் விலை தற்போது ரூ.96 ஆயிரம் வரை நெருங்கியுள்ளது நடுத்தர வர்க்க மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
