Close Menu
    What's Hot

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… இதுதான் காரணம்
    தமிழ்நாடு

    ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… இதுதான் காரணம்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 14, 2025Updated:December 14, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Gold
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்​னை​யில் ஆபரணத் ​தங்​கத்​தின் விலை வரலாறு காணாத வகை​யில் அதிகரித்து, ஒரு லட்சம் ரூபாயை நெருங்கி இருக்கிறது.

    சர்​வ​தேச பொருளா​தார நில​வரத்​துக்கு ஏற்ப, தங்​கத்​தின் விலை நிர்​ண​யிக்​கப்​பட்டு வரு​கிறது. 2025-ம் ஆண்​டின் தொடக்​கத்​தில் ​ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கு விற்​பனை செய்​யப்​பட்ட நிலை​யில், தொடர்ந்து ஒவ்​வொரு மாத​மும் விலை அதி​கரித்து கொண்டே சென்​றது.

    கடந்த அக்​டோபர் 17-ம் தேதி 97,600 ரூபாயாக ஆக விலை அதி​கரித்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. இதையடுத்து தீபாவளி​ முடிந்த பின்​னர் ஒரு சவரன் விலை 88,600 ரூபாயாக ஆகக் குறைந்​தது. பின்​னர் நவம்பர் 13-ம் தேதி 95,920 ரூபாயாக உயர்ந்​தது. அதைத்​தொடர்ந்து ஒரு மாத காலத்​துக்கு ஏற்ற இறக்​க​மாக இருந்த தங்​கத்தின் விலை கடந்த இரு வாரங்​களாக மீண்​டும் உயரத் தொடங்கி​யுள்​ளது.

    இந்த நிலையில்தான், சென்​னை​யில் ஆபரணத்​ தங்​கம் விலை புதிய உச்​சம் தொட்டு வரலாற்று சாதனை படைத்​துள்​ளது. டிசம்பர் 12-ல் இருமுறை தங்கம் விலை உயர்ந்தது. அதன்படி, 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை 320 ரூபாய் உயர்ந்து 12,370 ரூபாயாகவும், ஒரு சவரன் விலை 2,560 ரூபாய் உயர்ந்து ரூ.98,960 ஆகவும் புதிய உச்சம் தொட்டது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை 13,494 ரூபாயாகவும், சவரன் விலை 1,07,952 ரூபாயாகவும் விற்பனை ஆனது.

    தங்​கத்​துக்​குப் போட்​டி​யாக வெள்​ளி​யின் விலை​யும் கடுமை​யாக உயர்ந்​துள்​ளது. கடந்​த 5-ம் தேதி ஒரு கிராம் வெள்​ளி 196 ரூபாயகவும், ஒரு கிலோ வெள்​ளி 1 லட்சத்து 96 ஆயிரமாகவும் இருந்த நிலை​யில், படிப்​படி​யாக உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 210 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகவும் விற்​பனை செய்யப்படுகிறது.

    இன்று (டிச.14) 1 கிராம் தங்கம் (22 காரட்) ரூ.12,370க்கும், 1 சவரன் ரூ.98,960க்கும் விற்கப்படுகிறது. 1 கிராம் வெள்ளி ரூ.210- க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.2.10 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

    ஏற்​கெனவே, தங்​கம் விலை 2025 இறு​திக்​குள் 1 லட்​சம் ரூபாயை கடக்​கும் என வர்த்தக வல்​லுநர்​கள் கணித்​துள்ள நிலை​யில், அது இன்னும் சில தினங்களில் நிஜமாகவும் சூழல் தெரிகிறது.

    சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் – டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 90 ரூபாய் 55 பைசாவாக இருந்தது.

    ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் இப்படி வீழ்ச்சி கண்டுள்ளதுடன், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், வர்த்தக நிபுணர்கள் ஏற்கெனவே கணித்ததன்படி, இந்த ஆண்டு முடிவதற்குள் – அதாவது 2025 டிசம்பருக்குள் தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை எட்டக் கூடும் எனத் தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய விவகாரம்… திமுக மீது அன்புமணி தாக்கு
    Next Article உயர் இரத்த சர்க்கரை மற்றும் அதிக கொழுப்பால் சிரமப்படுகிறீர்களா?. நிவாரணம் அளிக்கும் முருங்கை கீரை!. நன்மைகள் இதோ!.
    Editor TN Talks

    Related Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    June 1, 2026

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    June 1, 2026

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”வாக்குறுதி கொடுக்கும்போது ரிசர்வ் வங்கி விதி தெரியாதா?” – விஜய்க்கு திமுக காட்டமான கேள்வி

    நீட் மறுதேர்வை ஆன்லைனில் நடத்த உச்சநீதிமன்றம் மறுப்பு

    “புது உருட்டு, சுயநல தற்பெருமை பேச்சு!” – முதல்வர் விஜய் மீது அதிமுக சரமாரி தாக்குதல்

    திருச்சியில் விஜய்க்கு சால்வை… திமுக கூட்டணியை கை கழுவுகிறதா மதிமுக?

    திமுகவும், அதிமுகவும் தனக்கு எதிராக சதி செய்தது – முதலமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்க குற்றச்சாட்டு

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.