சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்து வருவதன் எதிரொலியாக, அண்மைக்காலமாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை தற்போது குறையத் தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மட்டும் இரண்டு முறை சரிவு காணப்பட்டது. காலையில் ஒரு சவரன் ரூ.1,320 குறைந்து ரூ.71,040க்கு விற்பனையானது. ஒரு கிராம் ரூ.8,880 ஆக இருந்தது.
மாலையில் மீண்டும் தங்கம் விலை குறைந்தது. அதன்படி, ரூ.1,040 குறைந்து, சவரன் ரூ.70,000க்கும், ஒரு கிராம் ரூ.8,750க்கும் விற்பனையானது.
இதனால், இன்று ஒரேநாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து விற்பனையானது.
Next Article வரும் 14, 15ல் கனமழை வெளுக்கும்.!
Related Posts
Add A Comment