Close Menu
    What's Hot

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!
    தமிழ்நாடு

    அதிமுகவுக்கு இந்த கதியா?. செம்மலை வருத்தத்துடன் விலகல்!. இபிஎஸ்-க்கு பேரதிர்ச்சி!

    Editor web3By Editor web3May 18, 2026Updated:May 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Semmalai resigns
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக-வின் மூத்த தலைவரும், கட்சியின் அமைப்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் முடிந்து அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், செம்மலையின் இந்த முடிவு எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் பொதுக்குழுவை கூட்ட வேலுமணி தரப்பு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மொத்தமுள்ள 1800 பொதுக்குழு உறுப்பினர்களில் 1,050 பேர் பொதுக்குழுவை கூட்ட கையெழுத்திட்டுள்ளனர். 59% உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதால் பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளனர்,

    இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த பேரதிர்ச்சியாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வலுவான அரசியல் செல்வாக்கு கொண்ட செம்மலை அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வருத்தத்துடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன.

    இதே மனநிலையில் தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக உழைத்து வரும் லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.

    நடந்த சம்பவங்களும், நடக்கும் சம்பவங்களும் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக, பெரும் கவலையையே அளித்து வருகின்றன.புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் உருவாக்கிய இயக்கம், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் காப்பாற்றிய இயக்கத்திற்கு இந்தக் கதியா? ‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு இப்போது எல்லோருக்கும் பொதுவானதாகிவிட்டது.

    ‘உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது’ என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது.” எனவும் தெரிவித்தார்.

    மேலும், “புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அவர்களும் எனக்கு எவ்வளவோ வாய்ப்புகளை வழங்கியதோடு, அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தையும் உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்கடனாக, மறைந்த அந்த ஆளுமை மிக்க இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்திற்கு எனது அனுபவம் பயன்பட வேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

    ஆனால், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப் பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளைப் பார்க்கும்போது, இந்த இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப்படுகிறது.” எனவும் கூறியுள்ளார்.

    அதே சமயம், “புரட்சித் தலைவர்களின் ஆன்மாக்களிடம் மன்னிப்புக் கோரி, கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக் கொள்கிறேன்” என செம்மலை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.அதிமுகவில் தொடரும் உள்கட்சி பிளவு மற்றும் மோதல்களுக்கு மத்தியில், மூத்த தலைவரான செம்மலையின் இந்த விலகல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகாதலியை துடிக்க துடிக்க தாக்கிய காதலன்..! ஐஜி பங்களா எதிரே நடந்த கொடூரம்..!
    Next Article ‘பெண்கள் அமைதியாக இருந்தால் திருமணத்திற்கு சம்மதம்’!. தாலிபனின் புதிய சட்டத்தால் சர்ச்சை!
    Editor web3
    • Website

    Related Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    July 4, 2026

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    July 4, 2026

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாங்கள் யாருக்கும் அஞ்சமாட்டோம்!. 6 மாதத்தில் தவெக ஆட்சி கவிழும்!. அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

    ஈரானில் கமேனியின் பிரம்மாண்ட இறுதிச்சடங்கு தொடங்கியது!. மகன் மொஜ்தபா பங்கேற்கவில்லை!

    தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இன்று தொடக்கம்!. 9.30 மணிக்கு மேல் அனுமதி இல்லை!. 

    தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டை!. ரூ.57 லட்சம் பறிமுதல்!

    இங்கிலாந்து – இந்தியா 2வது டி20 போட்டி!. முதல் வெற்றி யாருக்கு?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.