தமிழக வெற்றி கழகத்திற்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் மக்கள் கவனத்தை ஈர்த்து வருகிறார். இந்த முறை திமுக, அதிமுக, தவெக, என பல முனை போட்டிகள் நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இதேபோல், தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவது, வாக்குப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு என பல்வேறு பணிகளை தொடங்கிவிட்டது.

இந்தநிலையில், அடுத்தாண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தவெக போட்டியிடவுள்ளது. தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகார பெறவில்லை. இருப்பினும், மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனை தொடர்ந்து, தவெக கட்சிக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அக்கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளிக்கப்பட்டது. இதுதவிர, விசில், ஆட்டோரிக்ஷா மற்றும் மைக்ரோபோன் உள்ளிட்ட 10 சின்னங்களின் பட்டியலுடன் ஒரு விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இருப்பினும், விருப்பத்தேர்வு சின்னங்களின் பட்டியலில் முதலிடத்தில் விசில் சின்னம் இருந்தது. இதுமட்டுமல்லமால், த.வெ.க. சார்பில் ஆட்டோ சின்னம் கேட்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது அக்கட்சிக்கு மோதிரம் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆட்டோ சின்னம் கேரளாவில் உள்ள ஒரு கட்சிக்கு சென்று விட்டதால், அந்த சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சின்னத்தை விரைவில் அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2014,2016 தேர்தல்களில் விசிக மோதிரம் சின்னத்தில் களம் கண்டது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version