Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி திணிப்பு!. செல்வப்பெருந்தகை கண்டனம்!
    தமிழ்நாடு

    திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி திணிப்பு!. செல்வப்பெருந்தகை கண்டனம்!

    Editor web3By Editor web3March 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selvaperunthagai protest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பதிவில், திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள தெற்கு ரயில்வே கோட்ட அலுவலகத்தின் நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பது தமிழகத்தின் மொழி பற்றுக்கும், மாநிலத்தின் தனித்துவமான அடையாளத்திற்கும் நேரடியான அவமதிப்பாகும்.
    தமிழ்நாடு என்பது ஆயிரம் ஆண்டுகள் பழமையான மொழி பாரம்பரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொண்ட நிலம். இத்தகைய மாநிலத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் அரசுத் துறைகளில் இந்தி பெயர்களை முன்னிறுத்துவது, மொழி ஆதிக்கத்தை திணிக்க முயலும் அரசியல் நோக்கத்தின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
    நாடு முழுவதும் பல்வேறு மொழிகள், பண்பாடுகள் உள்ள சூழலில் ஒரு மொழியை மட்டும் மேலோங்கச் செய்யும் முயற்சி இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. பலவகை மொழிகளை மதிக்க வேண்டிய ஒன்றிய அரசு, அதை பாதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
    தமிழக மக்களின் உணர்வுகளையும், தமிழின் மாண்பையும் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே இந்தி பெயரை உடனடியாக நீக்கி அதற்குப் பதிலாக தமிழில் பொருத்தமான பெயரை அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இந்தி திணிப்பில் எல்லை மீறிச் செல்கிறது பாஜக”!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
    Next Article போர் பதற்றம்!. இந்தியர்களுக்கு உதவ கண்ட்ரோல் ரூம்!. மத்திய அரசு நடவடிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.