வேலூர் அகரம்சேரி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜர் உரையாற்றி வருகிறார். அப்போது, தன் நெஞ்சத்தில் உள்ள சொந்தங்களான தமிழ் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தெரிவித்தார். ஆனால் ஆளும் கட்சியின் சதியால் அதற்கான சாத்தியம் இல்லை என தெரிவித்த விஜய், மக்களுக்கு ஒரு வாக்குறுதி கொடுப்பதாக கூறினார். அதாவது, தவெக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு கிராமங்களுக்கும் வந்து தனது சொந்தங்களை சந்திக்கவுள்ளதாக கூறினார்.

தொடர்ந்து காளையை வைத்து ஒரு குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், ஒரு ஊரில் பெரும் அனுபவசாலிகளால் கூட அடக்கமுடியாத காளை ஒன்று இருந்தது. அந்த காளையை அடக்க ஒரு சின்ன பையன் கெத்தா வந்து நின்றதாக கூறினார். பிறகு அந்த காளைக்கு 2 புல்லுக்கட்டை கொடுத்து அச்சிறுவன் அதை அடக்கிவிட்டதாகவும் பேசினார். அக்கதையில் வரும் காளை தான் தமிழக அரசியல் களம், அதை அடக்கிய சிறுவன் தான் தவெக என்று பேசினார்.

மேலும் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தவெக தில்லாக நிற்கும் என பேசிய விஜய், அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரை எதிர்ப்பதாக கூறினார். ஏனென்றால் விஜய் ஊழல், லஞ்சத்தை எதிர்க்கிறார், மக்கள் அவரோடு நிற்கிறார்கள் என பலருக்கு காண்டு என்றார். மேலும் யார் எதிர்த்தாலும், எத்தனை பேர் எதிர்த்தாலும் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் போட்டி என்று சூளுரைத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், தனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளதாகவும், அது வேறு யாரும் இல்லை. முதல்வர் ஸ்டாலின் அனைவரும் தனக்கு நண்பர்கள் என்று கூறியதை குறிப்பிட்டு பேசிய விஜய், அப்படி இருந்தால் கரூர் விவகாரத்தில் தன் மேல் ஏழ் பழிபோட வேண்டும் என கேள்வி எழுப்பினார், மேலும் உண்மையிலேயே நண்பர்கள் என்றால் தவெக கூட்டங்களுக்கு ஏன் அனுமதி வழங்குவதில்லை எனவும் கேட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version