தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார் என்றால் பா.ஜ.க வை 2026 தேர்தலில் சூரசம்ஹாரம் செய்வார் எனவும் தமிழ் கடவுள் முருகனை ஏமாற்றி வேஷம் போட முடியுமா ? பா.ஜ.க வேசம் சில மக்களை ஏமாற்றலாம். முருகனை ஏமாற்ற முடியாது என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளார்.

 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாரெல்லாம் பாசிச சக்தியோடு இணைந்து இருக்கிறார்களோ ? அவர்களை தமிழ் மக்கள் புறக்கணிப்பார்கள். தமிழ் கடவுள் முருகன் புறக்கணிப்பார் என்றார். தமிழகத்தில் முருகன் மாநாடு எதற்காக நடத்துகிறார்கள் அயோத்தியில் ராமர் நாடியதற்காக நடத்தினார்கள் ? என கேள்வி எழுப்பியதோடு, அயோத்தியில் ராமர் பா.ஜ.க வை கைவிட்டு விட்டார். மக்களை நம்பி பா.ஜ.க கிடையாது. மதத்தை வைத்து அரசியல் செய்கிறது பா.ஜ.க என்று குற்றஞ்சாட்டினார். தமிழகத்திற்கு வர வேண்டிய கல்வி தராமல் மறுதலிக்கிறார்கள் என்றார்.

 

காங்கிரஸ் இருக்கும் வரை தமிழகத்தில் இருமொழிக் கொள்கை. இவர்கள் வந்த பிறகு மூன்றாவது மொழியை திணிக்கிறார்கள், தமிழ் கடவுள் முருகன் இருக்கிறார். என்கிறார்கள் முருகன் இருக்கிறார் என்றால் இவர்களை எப்படி ஏற்றுக் கொள்வார் ? என தெரவித்தார். தமிழ் மொழியை சிதைக்கிறீர்கள், தமிழ் மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றால் தமிழ் கூடாது சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும் என கூறுகிறீர்கள். அப்போது தமிழ் கடவுள் முருகன் ஏற்றுக் கொள்வார்கள் ? தமிழகத்திற்கு துரோகம் செய்கிறீர்கள்

 

இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது, வலுவாக இருக்கிறது. எல்.முருகன் கூறுவது போன்றோ, பா.ஜ.க தலைவர் கூறுவது போன்றே இந்த கூட்டணி இல்லை. சிதறதுவதற்கு இது நெல்லிக்காய் மூட்டை கிடையாது. இது எக்கு கோட்டை கூட்டணி. சின்ன , சின்ன பிரச்சனைகள் இருந்தால் நாங்கள் பேசி தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்த செல்வபெருந்தகை, அதிமுகவும் பா.ஜ.க வும் பகல் கனவு காண்கிறார்கள் என தெரிவித்தார்.

ஆங்கிலம் தொடர்பான அமிஷ்தாவின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, அமித்ஷாவின் மகனே ஆங்கிலேயர் உருவாக்கிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார், ஒடுக்கப்பட்ட, விளிம்பு மக்களே தற்போது ஆங்கிலம் பேசுகிறார்கள். அங்கேயும் அரசியல் இருக்கிறது, இவர்கள் ஆங்கிலம் பேசுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் விபூதி அழித்தது தொடர்பான கேள்விக்கு, விபூதி வைத்ததற்கு எரிச்சல் இருந்து இருக்கும் அல்லது உபாதை இருந்து இருக்கும் அதனால் அழித்து இருப்பார்கள் விபூதி அளிப்பது என்பது அரசியல், அதை அரசியல்படுத்த கூடாது என தெரிவித்தார்..

Share.
Leave A Reply

Exit mobile version