Close Menu
    What's Hot

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»மதுரையில் இன்று (டிச. 7) முதலீட்டாளர்கள் மாநாடு!
    தமிழ்நாடு

    மதுரையில் இன்று (டிச. 7) முதலீட்டாளர்கள் மாநாடு!

    Editor web1By Editor web1December 6, 2025Updated:December 7, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    CM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மதுரையில் இன்று (டிச. 7) நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

    மதுரையில் இன்று (டிச. 7) நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘தமிழ்நாடு வளர்கிறது’ என்ற தலைப்பில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு 2025 நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் மொத்தம் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.36,660.35 கோடி மதிப்பிலான முதலீடுகள் 56,766 இளைஞர்களின் புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலூரில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாகவும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மதுரை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.18.795 கோடி மதிப்பில் 18,881 வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.8,668 கோடி மதிப்பில் 96.55 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.27,463 கோடி மதிப்பிலான பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இன்று (டிச. 7) நடைபெறும் விழாவில் 63,698 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்களை முதலமைச்சர் வழங்க உள்ளார். ரூ.3,065 கோடி மதிப்பில் முடிவடைந்த பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.150.28 கோடி மதிப்பில் மதுரை மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலம் என பெயரிடப்பட்டு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article20 போட்டிகளுக்கு பிறகு டாஸில் வெற்றி.. இந்திய அணியின் ஏக்கம் முடிந்தது
    Next Article “மத அரசியலுடன் தமிழகத்தில் நுழைய முயற்சி” – பாஜக மீது உதயநிதி ஸ்டாலின் பாய்ச்சல்
    Editor web1
    • Website

    Related Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    July 3, 2026

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    சி.விஜயபாஸ்கர் ராஜினாமா விவகாரம்!. சபாநாயகர் முடிவை எதிர்த்து அதிமுக வழக்கு!

    விஜயபாஸ்கர் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்!. ஓ.எஸ்.மணியன் அதிரடி!

    போதைப்பொருள் கடத்தல்!. விவரங்களை அளிக்க தவறிய மத்திய அரசுக்கு அபராதம்!. நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.