தமிழக அரசியலில் தற்போது பரபரப்பாக பேசப்படும் பெயர் ஆதவ் அர்ஜுனா, 2025 பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) கட்சியில் இணைந்து அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆவார். முன்னாள் கூடைப்பந்து வீரராகவும், விளையாட்டு நிர்வாகியாகவும், தேர்தல் வியூக வகுப்பாளராகவும் விளங்கி வருகிறார்.

கடந்த சில நாட்களாக, இவரது பெயர் தலைப்புகளில் இடம்பிடித்து வருகிறது. ஏனென்றால், ரஜினி குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தநிலையில், விஜய் – சங்கீதா பிரச்சனை வெளியே வர ஆதவ் அர்ஜுனா தான் காரணம் என ஜோஸ் சார்லஸ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

விஜய்யின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள விரிசல் குறித்த செய்திகள் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக லட்சிய ஜனநாயகக் கட்சியின் (LJK) தலைவரும், மார்ட்டின் குழுமத்தின் வாரிசுமான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய் – சங்கீதா இடையிலான பிரச்சனைகள் வெளிச்சத்திற்கு வரவும், அவர்களது பிரிவிற்கும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவே முக்கியக் காரணம் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா எங்கு இருந்தாலும், அந்த இடம் முழுவதும் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற மேலாதிக்க எண்ணம் கொண்டவர் என்று ஜோஸ் சார்லஸ் சாடியுள்ளார். தனது அரசியல் செல்வாக்கை நிலைநிறுத்தவும், கட்சியில் தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தவும் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஆதவ் தலையிட்டு குழப்பங்களை ஏற்படுத்தியதாக அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது மட்டுமன்றி, ரஜினி ரசிகர்களின் கடும் எதிர்ப்பையும் சம்பாதித்தது. ரஜினி விவகாரத்தில் தவெக தலைமை அமைதி காத்து வரும் நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனரான ஜோஸ் சார்லஸே அவருக்கு எதிராகப் புகார்களைக் கூறியிருப்பது அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version