Close Menu
    What's Hot

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அமித் ஷாவா?. அவதூறு ஷாவா?. முதல்வர் ஸ்டாலின் விளாசல்!.
    தமிழ்நாடு

    அமித் ஷாவா?. அவதூறு ஷாவா?. முதல்வர் ஸ்டாலின் விளாசல்!.

    Editor web3By Editor web3January 7, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் இந்து மக்களின் உரிமை பறிக்கப்படுவதாக கூறிய அமித் ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,595 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. புதிய பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், மகளிர் குழுக்களுக்கு நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் வேளாண் கருவிகள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்கள் நலனுக்காக செய்யப்படுகின்ற திட்டங்களை குறை சொல்ல முடியாதவர்கள் இல்லாத பிரச்சனைகளை உருவாக்கி குளிர் காயலாம் என்று நினைக்கிறார்கள் . அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வருகை தந்திருந்தார் . அவர் அமித்ஷா வா அல்லது அவதூறு ஷா வா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த அளவிற்கு உண்மைக்கு புறம்பாக பேசிவிட்டு சென்றிருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இந்து சமய நம்பிக்கைகள் வழிபாட்டு உரிமைகளுக்கு முடிவு கட்டும் வகையில் நம்முடைய திமுக அரசு செயல்பட்டுவர் வருவதாக அமித் ஷா பேசி விட்டு சென்று இருக்கிறார். இதற்கான கடுமையான கண்டனத்தை இந்த விழாவின் மூலம் அனைவர் முன்னிலையிலும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

    பக்தர்கள் விரும்பக்கூடிய ஆட்சியாக திராவிடம் ஆடல் ஆட்சி சிறந்து விளங்குகிறது. ஆன்மீக விரும்பிகள் விரும்பும் ஆட்சியாக இருக்கிறது. அனைத்து சமயத்தவர் மதிப்பளிச்சு மாத உரிமையை காப்பாற்றுகின்ற ஆட்சியாக திமுக செயல் பட்டு வருகிறது. இப்படிப்பட்ட தமிழ்நாட்டில் இந்துக்களின் உரிமை பறிக்கப்படுவதாக துளியும் உண்மை இல்லாத குற்றச்சாட்டை உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுவது அவரது பதவிக்கு கண்ணியம் அல்ல. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கலவரம் நடத்தவும், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறவர்களின் எண்ணம் இதுவரை ஈடு ஏறவில்லை என்பதுதான் உண்மை.

    அதனை நடக்க விடமாட்டோம் . ஒரு போதும் இந்த ஸ்டாலின் இருக்கும் வரை அது நிறைவேறாது. ஒரு சிலர் இதுபோன்று பேசி வெறுப்பு பிரச்சாரத்தை உருவாக்கலாம் என்று எண்ணம் உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டைப் பற்றி அவதூறாக பேசிவிட்டு மட்டும் போகவில்லை. ஒரு நல்ல காரியத்தையும் செய்து விட்டு சென்றிருக்கிறார். நாம் கேட்க வேண்டிய கேள்விகளை அவரே கேட்டு விட்டு சென்றிருக்கிறார். நமக்கு வேலையை எளிமையாக்கி தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெருங்கும் தேர்தல்!. அடுத்த மாதம் தமிழகம் வரும் தேர்தல் ஆணைய‌ அதிகாரிகள்!.
    Next Article ஆவின் பால் விலை உயர்வா?. தமிழக அரசு விளக்கம்!
    Editor web3
    • Website

    Related Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    June 4, 2026

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    June 4, 2026

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”125 நாள் வேலைத் திட்டத்தில் இனி 12 நாள் கூட வேலை கிடைக்காது”

    ”தொடரும் குற்றங்கள்…  எதற்குமே பொறுப்பேற்காத அரசு” – கனிமொழி காட்டம்!

    8,200 வேலைவாய்ப்பு… மூன்று திட்டங்கள்…  எல் அண்ட் டி நிறுவனத்துடன் ஒப்பந்தம்!

    குளிரப்போகும் தமிழகம்… 26 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

    மின்வெட்டு பிரச்சினையை திசை திருப்புவதாக  செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.