சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பின் தொடர் சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில் இன்று (ஜன. 7) தங்கம் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,02,960 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,870-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,830க்கும், ஒரு சவரன் ரூ.1,02,640க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலை இன்று காலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.283-க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,83,000 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிராம் வெள்ளி ரூ. 271க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,71,000க்கும் விற்பனை ஆனது.
