Close Menu
    What's Hot

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL மேட்ச் கிடையாது; அரசே ஏற்று நடத்தவேண்டும்!. ஐகோர்ட் கிளை அதிரடி!
    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு ஒன்றும் IPL மேட்ச் கிடையாது; அரசே ஏற்று நடத்தவேண்டும்!. ஐகோர்ட் கிளை அதிரடி!

    Editor web3By Editor web3January 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எந்ததாக குறிப்பிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை மாவட்ட நிர்வாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் மேட்ச் கிடையாது, சில தனிநபர்கள் ஜல்லிக்கட்டை நடத்தியதால் தான் பிரச்சனைகள் எழுந்தன எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    மேலும், ஜனவரி 15-ஆம் தேதி அவனியாபுரத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டியை, கிராம கமிட்டியே நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாக்கள் உலகப் புகழ்பெற்றவை என்பதால், இவ்விழாக்களை தனிநபர்கள் நடத்துவது ஏற்றதல்ல என்றும், அரசு நிர்வாகமே இப்போட்டிகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.

    அதாவது, கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பிறகு, 2018-ம் ஆண்டு தனிநபர் சங்கம் ஒன்று ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியது. இதற்கு எதிராக முன்பே உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு விழாவை மாவட்ட நிர்வாகமே நடத்த வேண்டும் என்றும், 16 பேர் கொண்ட ஆலோசனை குழுவுடன் போட்டி நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டதாக மனுவில் கூறப்பட்டது. தற்போது வருகிற 15-ந் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு விழாவை, அனைத்து சமுதாய பிரதிநிதிகள் அடங்கிய கிராம பொது கமிட்டிக்கு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெரும் பரபரப்பு!. முதல்வர் ஸ்டாலின் கார் டயர் வெடித்து விபத்து!. 
    Next Article பாகிஸ்தானுக்கு தாவிய முஸ்தாபிசுர்!. PSL-ல் குறைந்த விலைக்கு விற்கப்பட்டார்!. 
    Editor web3
    • Website

    Related Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    June 19, 2026

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    June 19, 2026

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    June 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    “மேகதாது தீர்மானத்திற்கெல்லாம் கர்நாடகா பணியாது” – துரைமுருகன் சொல்லும் மாற்று யோசனைகள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.