சென்னை தி நகர் உள்ள சார் பிடி தியாகராயர் அரங்கில் சமூக நீதி பேரவை சார்பில் பெரியாரின் பெருந்தொண்டர் வே.ஆனைமுத்து நூற்றாண்டு விழாவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு உரையாற்றினார்.

மருத்துவர் ராமதாஸ் மற்றும் வே.ஆனைமுத்து ஐயா அவர்கள் வி பி சிங்கை சந்தித்து வேலைவாய்ப்பில் OBC மக்கள் இட ஒதுக்கீடு காக்க பேசினர். அதன் அடிப்படையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது.
2006 மத்தியில் கூட்டணி ஆட்சியில் பாமக அங்கமாக இருந்தோம் அதனால் தான் பட்டியலின மக்கள் கோரிக்கை நிறைவேற்ற முடிந்தது.

தமிழகத்தில் எவ்வளவோ சிக்கல் உள்ளது. ஆட்சி அதிகாரம் கொடுத்தால் அன்றாடம் ஒரு கையெழுத்து போட்டு எவ்வளவோ சாதிக்க முடியும்.

தற்போது உள்ள ஆட்சியில் திமுக அரசிற்கு அதிகாரம் உள்ளது ஆனால் இல்லை என எஸ் ஜே சூர்யா திரைப்படத்தில் வந்தது போலதான் உள்ளது திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி திமுகவில் விமர்சித்தார் பின்னர் தொடர்ந்து பேசிய அன்புமணி அதிமுக ஆட்சியில் வழங்கபட்ட 10.5 விழுக்காடு அதன் பின்னர் வந்த திமுக அரசு முறையாக நீதிமன்ற வழக்கை நடத்தவில்லை. இதனால் அவை கிடைக்கப் பெறவில்லை எனக்கு குற்றம்சாட்டினார்.

சாதிவாரியாக கணக்கெடுப்பு தொடர்பான திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்த பேச்சு. நான்கு ஆண்டு முன்பு தற்போதுள்ள முதல்வர் உறுதியாக செய்து கொடுப்போம் என சொன்னார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு இட ஒதுக்கீடு தொடர்பாக கேட்டல் மீண்டும் மீண்டும் ஏன் தொந்தரவு செய்கிறார்கள் என கேட்கிறார்….? முதல்வர் ஸ்டாலின் எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டார்.

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் தான் மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என சட்ட பேரவையில் தெரிவிப்பது மிக பெரிய மோசடி என அன்புமணி விமர்சித்தார்.

மற்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உரிமை உள்ளது ஆனால் தமிழகத்திற்கு உரிமை இல்லை ஏன் என்றால் தமிழகத்திற்கு ஜப்பான் நடைமுறை தான் பின்பற்றபடும் என்பதை போல் முதல்வர் செயல்படுகிறார். கல்வி வேலை வாய்ப்பு இல்லத்தால் தான் வட தமிழ்நாடு பகுதியில் மது விற்பனை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பாதுகாத்தவர் ஜெயலலிதா. 69 விழுக்காடு பாதுகாக்கப்பட்டது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில்தான் இல்லை என்றால் இட ஒதுக்கீடு பறிபோயிருக்கும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version