Close Menu
    What's Hot

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!
    தமிழ்நாடு

    விஜய் முதல்வரானதில் பொறாமையா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்!

    Editor web3By Editor web3May 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rajini byte
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யின் அரசியல் வெற்றி குறித்தும், தன்னைச் சுற்றி பரவிய வதந்திகள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், விஜய் முதல்வராவதை தடுக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்ததாக பரவிய வதந்திகளை  முற்றிலுமாக மறுத்துள்ளார். அதாவது, “தேர்தல் முடிவுகளுக்குப் பின் நான் மு.க.ஸ்டாலினை சந்தித்ததால் பல விமர்சனங்கள் வந்தன. அதற்கு நான் பதிலளிக்காமல் இருந்திருந்தால், அந்த வதந்திகள் உண்மையாகிவிடும். மு.க.ஸ்டாலின் எனது 40 ஆண்டு நண்பர். அரசியலுக்கு அப்பாற்பட்டது எங்களது நட்பு. தேர்தலில் மு.க.ஸ்டாலின் தோற்றது சங்கடம்தான் என்றார்.

    நான் ஒன்றும் தரங்கெட்ட ஆள் கிடையாது. எனக்கும் விஜய்க்குமே 28 வயது வித்தியாசம் உள்ளது. நான் அரசியலிலேயே இல்லாதபோது விஜய் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? கமல் முதல்வராகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்குமா எனத் தெரியவில்லை விஜய் வெற்றிபெற்றது எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோஷம் என்று ரஜினி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    விஜய்யின் அரசியல் வருகையையும் அவரது பிரம்மாண்ட வெற்றியையும் மனதாரப் பாராட்டிய ரஜினிகாந்த், விஜய்க்கு அவரது 100% சினிமா புகழ் அரசியலில் கைக்கொடுத்துள்ளது. தமிழக மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பிய சமயத்தில் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். மக்களுக்கு அவர் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது. விஜய் இந்தத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். இது மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரின் சாதனையை விடப் பெரிய வெற்றியாகும். நான் சம்பிரதாயத்துக்காக விஜய்யை சந்திக்க விருப்பமில்லை என்வும் தெரிவித்தார்,

    “நான் வந்திருந்தால் 100% வென்றிருப்பேன்!”

    தனது அரசியல் களம் குறித்துப் பேசிய ரஜினி, “நான் அரசியலுக்கு வந்திருந்தால் கண்டிப்பாக 100% வென்றிருப்பேன். ஆனால், கிடைப்பது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது” என்று தனது முத்துப் பட டயலாக்கை கூறி குறிப்பிட்டார். மேலும், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தனிப்பட்ட முறையில் விருப்பப்பட்டுக் கேட்டுக்கொண்டதால் மட்டுமே, அவரது பதவியேற்பு விழாவில் தான் பங்கேற்றதாகவும் அவர் தெளிவுபடுத்தினார்.

    தொடர்ந்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களுக்கு ரஜினிகாந்த் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் ஆலோசனையையும் வழங்கியுள்ளார். “தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்கள் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையாகச் செயல்பட வேண்டும். தொண்டர்கள் செய்யும் ஒரு சிறு தவறு கூட, நேரடியாக விஜய் என்ற தனிமனிதரையும் அவரது அரசியல் பாதையையும் பெரிதும் பாதிக்கும்.”

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅதிமுகவில் தான் மட்டுமே இருக்கவேண்டும் என இபிஎஸ் நினைக்கிறார்!. செங்கோட்டையன் விமர்சனம்!
    Next Article தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!
    Editor web3
    • Website

    Related Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    July 4, 2026

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    July 4, 2026

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் அமைச்சர் நிர்மலா சீதாராமன்;  ITER திட்டத்தை பார்வையிட்டார்

    2-வது டி 20; இங்கிலாந்துக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்தியா

    பிரதமர் மோடிக்கு ‘மரண மிரட்டல்’ ; ஆஸ்திரேலியா போலீஸ் விசாரணை

    அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு விழா: டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து

    சச்சினை விஞ்சிய சூர்வன்ஷி!  15 வயதில் டி 20 போட்டியில் அறிமுகமாகி புது வரலாறு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.