Close Menu
    What's Hot

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரூர் விவகாரம்!. வரும் 17ம் தேதி சிபிஐ முன் ஆஜராகும் செந்தில் பாலாஜி!. அதிரடி அறிவிப்பு!.
    தமிழ்நாடு

    கரூர் விவகாரம்!. வரும் 17ம் தேதி சிபிஐ முன் ஆஜராகும் செந்தில் பாலாஜி!. அதிரடி அறிவிப்பு!.

    Editor web3By Editor web3March 10, 2026Updated:March 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    senthil balaji karur case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) அனுப்பிய சம்மனை ஏற்று, கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக வரும் 17-ஆம் தேதி ஆஜராகப் போவதாக முன்னாள் அமைச்சரும், கரூர் எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    கடந்த 2025-ம் ஆண்டு கரூரில் நடைபெற்ற த.வெ.க மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க கோரி சிபிஐ அனுப்பிய நோட்டீஸ் குறித்துப் பல்வேறு ஊகங்கள் வெளியான நிலையில், தற்போது அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

    முன்னதாக, சிபிஐ அதிகாரிகள் நேரில் வழங்கிய சம்மனை செந்தில் பாலாஜி தரப்பினர் வாங்க மறுத்ததாகவும், அதன் பின்னரே அவருக்கு மின்னஞ்சல் (E-mail) வாயிலாக சம்மன் அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் பரவின. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில், இதுதொடர்பாக செந்தில் பாலாஜி தனது எக்ஸ் பக்கத்தில், கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.. வருகின்ற மார்ச் 17 அன்று நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்கவுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

    ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளிட்டோரிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது செந்தில் பாலாஜியும் ஆஜராக உள்ளது அரசியல் களத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையின் மூலம் கரூர் சம்பவத்தில் நிலவும் மர்மங்கள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய், கேஸ் வழங்க தயார்!. ரஷ்யா அதிரடி அறிவிப்பு!
    Next Article பாஜக சூழ்ச்சி!. EPS, டிடிவி வழியில் விஜய்க்கும் நெருக்கடி?. காங். துணைத் தலைவர் விளாசல்!.
    Editor web3
    • Website

    Related Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    “மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 விரைவில் வழங்கப்படும்” – அமைச்சர் ஜெகதீஸ்வரி உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.