Close Menu
    What's Hot

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»கும்பகோணம் மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்…
    தமிழ்நாடு

    கும்பகோணம் மாநகராட்சிக்கு எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2025Updated:May 12, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1344344
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர் நீதிமன்றம், தவறினால் கும்பகோணம் மாநகராட்சிக்கும், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள பொற்றாமரை குளம் உள்ளிட்ட 44 குளங்கள், அதற்கு நீர் செல்லக்கூடிய 11 வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த 2018 ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    இந்த உத்தரவை அமல்படுத்தப்படவில்லை என வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அளித்த அறிக்கையில், மொத்தமுள்ள 44 குளங்களில், ஏழு குளங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றி மீட்கப்பட்டுள்ளது. மூன்று குளங்களில் மரங்கள் உள்ளதாகவும், நான்கு குளங்கள் தொடர்பாக மதுரை அமர்வில் வழக்கு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    26 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மாவட்ட நீதிபதி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    இதனை பதிவு செய்து கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு மாதங்களில் அகற்ற வேண்டும் என நீர்வளத்துறைக்கு கெடு விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள், இல்லாவிட்டால், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    குறித்த காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோரி, மாவட்ட நீதிபதி விண்ணப்பிக்க அனுமதியளித்தும் உத்தரவிட்டனர்.

    நீதிமன்ற அனுமதியில்லாமல் குளங்கள், வாய்க்கால்களில் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது எனவும், பொற்றாமரை குளத்தின் வரத்துக் கால்வாய்களை கண்டறிந்து, அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கும், கும்பகோணம் மாநகராட்சிக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    Chennai High Court கும்பகோணம் சென்னை உயர் நீதிமன்றம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாமல்லை மாநாடு மாபெரும் வெற்றி – அன்புமணி இராமதாஸ் அறிக்கை
    Next Article டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்த விராட் கோலி..ரசிகர்கள் ஷாக்..
    Editor TN Talks

    Related Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    July 15, 2026

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    July 15, 2026

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தூங்கும் தவெக அரசு! எப்போது விழித்துக்கொள்ள போகிறது.. மக்கள் தான் பாவம்..!! ஜெயக்குமார் கடும் தாக்கு..!!

    நவீன நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம்… திறப்பு விழாவுக்கு தயாராகும் சென்னை பூங்கா ரயில் நிலையம்

    அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு:  மேலும் அதிகரிக்க திட்டம்!

    அடடே..!! 10 நிமிஷம் தான்.. வீட்டுக்கே வரும் சிலிண்டர்.. அசத்தும் இன்ஸ்டாமார்ட்..!!

    1,599வது நாளை எட்டிய ரஷியா – உக்ரைன் போர்..!! இன்னமும் குறையாத சூடு.. தொடரும் தாக்குதல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.