Close Menu
    What's Hot

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!
    தமிழ்நாடு

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    Editor web3By Editor web3April 14, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thirupur vijay speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடக்கவுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவினாசி, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்கிறார். இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த தவெக தலைவர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெருமாநல்லூர் பகுதிக்கு ரோடு ஷோ சென்றார்.

    இந்த நிலையில் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் செய்தார். அப்போது, பேசியவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் கொங்கு மண்டல தங்கங்களே.. திருப்பூர் மக்களே. உங்கள் அனைவருக்கும் வனக்கம். வருகிற 16ந்தேதி தேர்தல் வாக்குறுதிகளை புத்தகமாக வெளியிட உள்ளோம். அதற்கு முன் உங்களிடம் சில முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கிறேன்.

    நெசவாளர்களின் தயாரிப்புகளை நேரடியாக சர்வதேச சந்தைகளில் விற்க அரசு சார்பில் இ காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்.

    நிலையற்ற நுல் விலை,மின்சார நெருக்கடியை பகிர்ந்துகொள்ள, கைத்தறி, விசைத்தறி வைத்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

    கைத்தறிகளுக்கு இலவச மின்சாரம் 500 யூனிட்டாகவும், விசைத்தறிகளுக்கு ரூ.1,500 யூனிட்டாகவும் வழங்கப்படும்.

    நெசவாளர்களின் உற்பத்தி செலவுகளை குறைக்க நூல், சாயங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு செய்யப்படும்.

    நெசவாளர்களின் முதியோர் ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தப்படும்.

    சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மூடப்படுவதற்கான காரண்ங்களின் ஒன்று மின் கட்டணம். இது ஜவுளித்துறையை பாதித்துள்ளது

    சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பீக் அவர்ஸ் மின் கட்டணத்தை தவெக நிறுத்தி வைக்கும்.

    சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு 100 சதவீத மின்சார வரி விலக்கு அளிக்கப்படும்.

    விவசாயிகள்:

    5 ஏக்கருக்கு குறைவான விவசாய ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

    5 ஏக்கருக்கு மேல் விவசாய ஏக்கர் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடன் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்.

    நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன் ரூ4,500 ஆக உயர்த்தப்படும் விவசாயி குடும்பத்துக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் வழங்கப்படும் பயிர் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

    அரசு உழியர்கள் நலன்:

    அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்ட குறித்து பரிசீலிக்கப்படும்.

    5க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பணியாற்றிய தற்காலிக ஆசியிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்.

    பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாச்சாரம் முடிவுக்கு கொண்டுவரப்படும் காவலர்களுக்கான இடமாற்றம்,

    வெளிப்படையாக நடைமுறைப்படும் காவலர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும்.

    காவலர்களுக்கு மாதம் ரூ.1000 கூடுதலாக வழங்கப்படும்.

    காவலர் நல மருத்துவமனை நிறுவப்படும்.

    பெண் காவலர்களுக்கென தனி ஓய்வறைகள், நடமாடும் டாய்லெட் யூனிட்டுகள் அமைக்கப்படும்.

    நிங்க எல்லோரும் விஜய்யை 100 சதவீதம் நம்பலாம். நான் உங்களுக்காக மட்டுமே வந்துள்ளேன். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன். உங்க அண்ணணுக்கு, உங்க தம்பிக்கு, உங்க மகனுக்கு, உங்க பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள். தயவு செய்து விசில் சின்னத்துக்கு ஒட்டு போடுங்க. இது ஒரு விசில் புரட்சி தேர்தலாக இருக்கும். கான்பிடண்ட்டா இருங்கள் நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!
    Editor web3
    • Website

    Related Posts

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    April 14, 2026

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    April 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து நெசவாளர்களுக்கும் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு!. விஜய் வாக்குறுதி!

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    பூலுவப்பட்டி ரோடு ஷோ மிஸ்ஸிங்!. தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!. திருப்பூரில் நடந்தது என்ன?

    ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில் மாணவர் உயிரிழப்பு!. டிரெக்கிங் சென்றபோது நேர்ந்த சோகம்!.

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    Trending Posts

    நாடாளுமன்றத்தில் ‘மெகா’ மாற்றம்!. 850 ஆகிறது லோக் சபா பலம்!. தமிழகம், தென் மாநிலங்களின் நிலை என்ன?

    April 14, 2026

    ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000, ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்!. பாஜக தேர்தல் அறிக்கை

    April 14, 2026

    தமிழகத்தில் 234 தொகுதிகள் உருவான ரகசியம்!. 1963-ல் நடந்த ‘மேஜிக்’ சீரமைப்பு இதுதான்!

    April 14, 2026

    69 வயதில் ‘கெத்து’ காட்டும் கொரில்லா!. கின்னஸ் சாதனை!. பேத்தியுடன் விளையாடி மகிழும் ஆச்சரியம்!

    April 14, 2026

    ராணுவத்தையே வழிநடத்தும் பெண் தளபதி!. உலக நாடுகளுக்கு முன்னுதாரணமான ஆஸ்திரேலியா!

    April 14, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.